twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கியாரே டிரெண்டிங்கா.. வேங்கை மவனின் வெறித்தனம்.. தெறிக்கவிடும் #2YrsOfPeoplesVoiceKAALA ஹாஷ்டேக்!

    |

    சென்னை: தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான காலா படம் இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

    Recommended Video

    Annathe Release Date Announced | Nasser Kabadadhari Dubbing, Master Post Production Starts

    மும்பை தாராவி மக்களின் ஆபத் பாண்டவனாக காலா சேட்டாக நடிகர் ரஜினிகாந்த் அட்டகாசமாக மிரட்டியிருந்த படம் காலா.

    காலா என்றால் கருப்பு என்று அர்த்தம். கருப்பு நிறத்தின் நெருப்பான மனிதராக அந்த படத்தில் ரஜினி வசனங்களிலும் முதிர்ச்சியான நடிப்பாலும் மிரட்டி இருந்தார்.

    அந்த நடிகர் இல்லையாம்.. அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் ரீமேக்கில் இவர் தான் ஹீரோவாம்.. செம போங்க!அந்த நடிகர் இல்லையாம்.. அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் ரீமேக்கில் இவர் தான் ஹீரோவாம்.. செம போங்க!

    கியாரே செட்டிங்கா

    கியாரே செட்டிங்கா

    கபாலி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, மீண்டும் பா. ரஞ்சித் கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்த படம் தான் காலா. ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, சமுத்திரகனி, நானா படேகர் உள்ளிட்ட பலர் காலாவில் நடித்திருந்தனர். ரஜினி படங்கள் என்றாலே, புதுசா என்ன பஞ்ச் டயலாக் இருக்கு என பார்க்கும் ரசிகர்களுக்கு, இந்த படத்தில் வந்த "கியாரே செட்டிங்கா.. வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா மொத்தமா வாங்களேன்" வசனம் தீயேட்டர்களில் தீப்பொறிகளை கிளப்பின.

    உள் அர்த்தங்கள்

    உள் அர்த்தங்கள்

    வெள்ளை உடையில் வரும் பாலிவுட் இயக்குநர் நானா படேகரை வில்லனாக சித்தரித்தும், கருப்பு உடையில் சூப்பர் ஸ்டாரை காலாவாக வடித்தும், கார் நம்பர் பிளேட், இராவண காவியம், அனுமன் வைத்திருப்பது போல கதாயுதத்தை வைத்துக் கொண்டு கடைசியில் இலங்கை எரிப்பது போல தாராவியை எரிப்பது என பல உள் அர்த்தங்களுடன் இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி இருந்தார். படத்தின் ரிலீஸ் சமயத்தில் சர்ச்சைகளும் கிளம்பின.

    வாடி என் தங்கசிலை

    வாடி என் தங்கசிலை

    முதல் காதலியை நினைத்து பாடும் "கண்ணம்மா" பாடலாகட்டும், "கற்றவை பற்றவை" என நெருப்புடா ரேஞ்ச் பாடலாகட்டும், ஈஸ்வரி ராவுடன் ரொமான்ஸ் செய்த படியே பாடும் "வாடி என் தங்கசிலை" என ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வெரைட்டி காட்டி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ஏரியாவில் மிகப்பெரிய சிக்ஸர் அடித்திருப்பார்.

    நிலம் எங்கள் உரிமை

    நிலம் எங்கள் உரிமை

    எந்த நாடாக இருந்தாலும், அங்கே வசிக்கும் சாமானிய மக்களை சுரண்டி ஒரு பணக்கார கூட்டமும், அரசியல்வாதிகளும் அவர்களது நிலத்தையும், உரிமையையும் பறித்துக் கொண்டு அவர்களை நிர்கதி ஆக்கும் செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை நினைவுப்படுத்தவும், நிலம் எங்கள் உரிமை என்பதை அழுத்தம் திருத்தமாக ஆதிக்க வர்கத்தினர் செவிகளுக்கு உணர்த்தும் படியாக இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி இருப்பார்.

    வித்தியாசமான பிளாஷ்பேக்

    வித்தியாசமான பிளாஷ்பேக்

    #2YrsOfPeoplesVoiceKAALA என்ற ஹாஷ்டேக்கை காலா படம் வெளியாகி 2 வருஷம் ஆனதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காலா படத்தில், ரஜினிக்கும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷிக்கும் நடக்கும் முதல் காதல், பிரிவு உள்ளிட்ட பிளாஷ்பேக் காட்சிகள் கபாலி படத்தை போல எடுக்காமல், அனிமேஷனாக எடுத்து அதிலும் வித்தியாசம் காட்டியிருந்தார் பா. ரஞ்சித்.

    டெமி காட்

    டெமி காட்

    தமிழ் சினிமாவின் டெமி காடாக நடிகர் ரஜினி திகழ்கிறார் என்பதை காட்ட, காலா படத்தில் கருப்பசாமிக்கு தீபம் காட்டும் ஷாட்டில், காலா சேட் ரஜினி நடந்து வருவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இதெல்லாம் பா. ரஞ்சித் உள் அர்த்தத்துடனே வைத்ததாகவும், காலா படத்தின் சிறந்த ஃபிரேம் இது தான் என்றும் ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Superstar Rajinikanth’s Kaala movie completed its 2 years of release. After Kabali once again Pa Ranjith got the chance to direct Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X