»   »  அப்பவே தெரியும், விசாரணைக்கு இத்தனை விருதுகள் கிடைக்கும்னு! - தனுஷ்

அப்பவே தெரியும், விசாரணைக்கு இத்தனை விருதுகள் கிடைக்கும்னு! - தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விசாரணை படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருப்பது குறித்து படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும். இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதைப் போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற "விசாரணை " .


3 awards for Visaranai: Dhanush Happy

நான் "விசாரணை" திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரக்கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதை போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும், மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது.


எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் பத்ரிக்கை , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.

English summary
Actor Dhanush expressed his happy for 3 National awards to Visaranai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil