»   »  டிசம்பரில் சிங்கம் 3, போகன், விஜய் சேதுபதி படங்கள்!

டிசம்பரில் சிங்கம் 3, போகன், விஜய் சேதுபதி படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக பெரிய படங்கள் பண்டிகை நேரத்தை இலக்கு வைத்து வெளியாகி வசூலை அள்ளுவது வழக்கம்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல்தான் மிகப் பெரிய சீஸன். இந்த காலகட்டத்தில் சுமாரான படங்களும் கூட வசூலை அள்ளும்.

தீபாவளிக்கும் இல்லாமல் பொங்கலுக்கும் இல்லாமல் டிசம்பர் மாதத்திலும் சிலசமயம் பெரிய படங்கள் வெளியாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பரில் மூன்று பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

சிங்கம் 3

சிங்கம் 3

சூர்யா-ஹரியின் சிங்கம் 3 படம், டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஒரு பெரிய வெற்றியை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் சூர்யாவுக்கு மிக முக்கியமான படம் இது.

போகன்

போகன்

கதைத் திருட்டு சர்ச்சையில் கடுமையாக சிக்கியுள்ள போகன் படமும் டிசம்பரில்தான் வெளியாகிறது. ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி படம்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படமும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாக உள்ளன. இந்த ஆண்டில் விஜய் சேதுபதிக்கு இது ஏழாவது படம்.

ஏன் டிசம்பர்?

ஏன் டிசம்பர்?

பொங்கலுக்கு விஜய் நடிக்கும் பைரவா வெளியாகிறது. எனவே அதனுடன் போட்டி போடுவதைத் தவிர்க்கவும் டிசம்பரில் நிறைய விடுமுறை தினங்கள் உள்ளதால் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தப் படங்கள் டிசம்பர் மாதம் வெளியாகின்றன.

English summary
Singam 3, Bogan and Vijay Sethupathy's untitled movie are going to release in coming December.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil