கமல் வேலையை பார்த்த வருண்... காப்பாற்றப்பட்ட சிபி, மதுமிதா, ஐக்கி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 35 வது நாளை எட்டி உள்ளது. இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர்.
நிகழ்ச்சியின் ஐந்தாவது வாரத்தில், அடுத்த வார கேப்டன் டாஸ்கில் போட்டியிட போகிறவர்களை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டம், வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களின் வருகை என களைகட்டியது.

எவிக்ஷன் உண்டு
தீபாவளியால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. ஆனால் எவிக்ஷன் கண்டிப்பாக உண்டு என நேற்றைய ப்ரோமோவிலேயே கமல் கூறினார். நேற்றைய எபிசோடில் தாமரை - பாவனி சண்டை, தீபாவளி கொண்டாட்டம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி கமல் பேசினார். நிரூப் மற்றும் இசைவாணியை காப்பாற்றுவதாகவும் கமல் அறிவித்தார்.

சோறு கேட்ட ஹவுஸ்மேட்ஸ்
இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் முதல் ப்ரோமோவில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கேக் மற்றும் சோறு வீட்டிற்குள் அனுப்பி வைக்குமாறு போட்டியாளர்கள் கமலிடம், கோரஸாக பாடி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர் பிரியங்கா உள்ளிட்டவர்களை கழுவி ஊற்றி இருந்தனர்.

கமலுக்கு பதில் வருண்
இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக கமல் தான் யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை சொல்லி, வெளியேற போகிறவரையும் அறிவிப்பார். ஆனால் இந்த ப்ரோமோவில் கமலுக்கு பதில் வருண், யாரெல்லாம் காப்பாற்றப்படுகிறார்கள் எனபதை சொல்கிறார்.

காப்பாற்றப்பட்ட 3 பேர்
லிவ்விங் ஏரியாவில் வரிசையாக பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் காப்பாற்றப்படுகிறவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் பால் நிரப்பி, உரியவரிடம் கொடுக்கிறார் வருண். ப்ரோமோவின் ஆரம்பத்திலேயே சிபி காப்பாற்றப்படுவதாக கூறுகிறார் கமல். அவரைத் தொடர்ந்து மதுமிதா மற்றும் ஐக்கி பெர்ரி காப்பாற்றப்படுவதாக வருண் தெரிவிக்கிறார்.

வெளியேற போகிறவர் யார்
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 9 பேரில் நிரூப், இசைவாணி, மதுமிதா, சிபி, ஐக்கி பெர்ரி ஆகிய 5 பேர் காப்பாற்றப்பட்டு விட்டனர். மீதமுள்ள பாவனி, அக்ஷரா, அபிநய், சுருதி ஆகிய நான்கு பேரில் ஒருவர் இன்று வெளியேற உள்ளார். சுருதி வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுருதியை ஆதரிக்கும் ரசிகர்கள்
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், சுருதி தான் வெளியேறுகிறார். அவர் தான் சேஃப் கேம் ஆடவில்லை. சுருதி எவிக்ட் செய்யப்படுவது நேர்மையற்றது. சுருதியை விட நிறைய மிக்சர்கள் உள்ளே இருக்காங்க. ஆனால் சுருதி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். தாமரை என்ன செய்தாலும் விஜய் டிவி அவரை காப்பாற்றுகிறது. சுருதி நல்லா தான் விளையாடுறாங்க என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











