»   »  10 எண்றதுக்குள்ள.. 9 நிமிடத்தில் ஒரு பாட்டு.. ஆடப் போவது சார்மி.. பட்ஜட் ரூ. 3 கோடி!

10 எண்றதுக்குள்ள.. 9 நிமிடத்தில் ஒரு பாட்டு.. ஆடப் போவது சார்மி.. பட்ஜட் ரூ. 3 கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஐந்து நிமிடத்திற்கும் குறைவான பாடல் வந்தாலே, நம்மவர்களில் பலர் தம்மடிக்க வெளியில் கிளம்பிப் போய் விடுவார்கள். இதில் ஒன்பது நிமிட பாடல் என்றால்...

ஆம், விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள..' படத்தில் 9 நிமிடப் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆனால், நிச்சயமாக இப்பாடலுக்கு யாரும் வெளியில் எழுந்து செல்ல மாட்டார்கள் என அடித்துச் சொல்கிறார்கள் படக்குழுவினர்.

காரணம் இப்பாடலுக்கு ஆடப்போவது நடிகை சார்மி.

காதல் அழிவதில்லை...

காதல் அழிவதில்லை...

தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான சார்மிக்கு அடுத்தடுத்து சொல்லிக் கொள்வது போல் படங்கள் அமையவில்லை. அசப்பிலும், கொஞ்சம் நடிப்பிலும் ஜோதிகாவை நியாபகப் படுத்தினாலும் தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை.

முன்னணி நடிகை...

முன்னணி நடிகை...

இதனால், தெலுங்குப் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் சார்மி. அங்கு சார்மியின் தாராள மனதுக்கு ஏகத்துக்கும் வரவேற்பு. எனவே, முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

ஒரு பாடலுக்கு நடனம்...

ஒரு பாடலுக்கு நடனம்...

இந்நிலையில், மீண்டும் ஒரு பாடல் மூலம் தமிழில் பிரவேசிக்கிறார் சார்மி. ‘கோலி சோடா' படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிப் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளாராம் சார்மி.

ரூ. 3 கோடி செட்...

ரூ. 3 கோடி செட்...

இந்த ஒரு பாடலுக்காக மட்டும் 3 கோடி ரூபாயில் செட் போடப்பட்டு படமாக்கப் பட்டுள்ளதாம். சார்மியின் சம்பளம் மட்டும் ரூ. 30 லட்சம் என்கிறார்கள்.

திருப்புமுனைப் பாடல்...

திருப்புமுனைப் பாடல்...

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். கதையின் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளதாம்.

லாரி டிரைவர்...

லாரி டிரைவர்...

இப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் லாரி டிரைவர் எனக் கூறப்படுகிறது. படத்தின் கதையே, சென்னையில் இருந்து வடஇந்தியாவுக்கு செல்லும் லாரி டிரைவர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

நாயகி சமந்தா...

நாயகி சமந்தா...

இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சமந்தாவும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The movie in discussion is 10 Enradhukulla and it stars one of Tamil cinema's top stars, Vikram and Samantha in the main leads. The film is being directed by cinematographer turned director Vijay Milton and produced by hotshot director AR Murugadoss. As per the buzz, the Charmme has been paid a whopping 30 lakhs for her sizzling act.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil