»   »  அப்படி இருந்த மயிலு அன்ட் மகள்களா இப்படி ஆகிவிட்டார்கள்: வியக்கும் பாலிவுட்

அப்படி இருந்த மயிலு அன்ட் மகள்களா இப்படி ஆகிவிட்டார்கள்: வியக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரீதேவியும் அவரது இரண்டு மகள்களும் அழகுப் பதுமைகளாக வலம் வருவது பற்றி பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

நம்ம ஊர் மயிலு ஸ்ரீதேவி பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள்கள் உள்ளனர். முதலில் ஜான்வி, குஷியை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்த தயங்கினார் மயிலு.

காரணம் மகள்கள் தன் அளவுக்கு அழகில்லை என்று யாரும் கூறிவிடுவார்களோ என்ற பயம்.

ஜான்வி

ஜான்வி

வளர வளர மூத்த மகள் ஜான்வி தாயை போன்றே அழகாக வந்துவிட்டார். தாயை போன்றே சினிமா துறையில் ஈடுபட விரும்பும் அவர் தற்போது அமெரிக்காவில் நடிப்பு குறித்த படிப்பு படிக்கிறார்.

குஷி

குஷி

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கொழுக் மொழுக் என குண்டாக இருந்தார். திடீர் என்று பார்த்தால் பென்சில் போன்று ஒல்லிக்குச்சியாகிவிட்டார். அப்படி இருந்த குஷியா இப்படி ஆகிவிட்டார் என்று பாலிவுட்டே வியக்கிறது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

52 வயதானாலும் ஸ்ரீதேவியும் தனது மகள்களை போன்றே குட்டி, குட்டியாக ஆடை அணிந்து இளம் தலைமுறையினரை அசத்துகிறார். யார் மகள், யார் தாய் என்பதை உடையை வைத்து கண்டுபிடிக்க முடியவில்லை.

அழகிகள்

அழகிகள்

பாலிவுட்டில் அதிகம் பேசப்படும் வாரிசுகளாக உள்ளவர்கள் ஜான்வி, குஷி. அதிலும் ஜான்விக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. ஆனால் வரும் வாய்ப்பை எல்லாம் ஜான்வி தட்டிக் கழித்து வருகிறார்.

English summary
Recently, Jhanvi Kapoor posted an adorable picture of herself with her mother Sridevi and sister Khushi Kapoor on Instagram. And we must say, the Kapoor girls are looking stunning in the picture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil