Don't Miss!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- News
பாஜகவுக்கு ‘ஐடியா’வே இல்ல.. ஓபிஎஸ் இழுத்து விடுறார்.. மூல காரணமே அவர் தானாம்.. மாஜி சொல்லும் சேதி!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஷாருக்கானை கவர்ந்த விஜய் சேதுபதி படம்...எதுக்கு இப்படி பாராட்டியிருக்கார் தெரியுமா?
சென்னை : கோலிவுட் மட்டுமல்ல, டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களின் முதல் தேர்வு விஜய் சேதுபதியாக தான் இருந்து வருகிறார்.
அனைத்து மொழிக்காரர்களும் தங்களின் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். இதனால் பிஸியான நடிகராக மட்டுமல்ல பான் இந்தியன் வில்லனாக விஜய் சேதுபதி மாறி வருகிறார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருகிறார்கள். இதே போல் இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் இவர் தான் வில்லனாக நடிக்க உள்ளார்.
விஜய்சேதுபதி வில்லன் மெட்டீரியல் தான்.. ஹீரோ கிடையாது.. மாமனிதனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!

ஜவானில் வில்லனாக விஜய் சேதுபதி
டைரக்டர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியா மணி, யோகிபாபு நடித்து வரும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராணாவிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் மறுத்ததால் விஜய் சேதுபதியிடம் பேசி ஓகே வாங்கி உள்ளார் அட்லி.

விஜய் சேதுபதியை பாராட்டிய ஷாருக்
இந்த செய்தி மீடியாக்களில் பரவியதும், ஷாருக்கான், விஜய் சேதுபதியை பாராட்டிய பழைய வீடியோவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர துவங்கி விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்படி என்ன சொன்னார்
2019 ம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஷாருக்கான், என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே மிக அற்புதமான நடிகர் என விஜய் சேதுபதியை பாராட்டி உள்ளார்.

ஷாருக்கானை கவர்ந்தது இந்த படமா
டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சுப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை ரோலில் நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து விட்டு தான் ஷாருக்கான் இவ்வாறு பாராட்டி உள்ளார்.

விஜய் சேதுபதி ரியாக்ஷன் என்ன
ஷாருக்கானின் இந்த பாராட்டை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி, சற்று தடுமாறி நன்றி சொன்னார். பின்னர் அது பற்றி விஜய் சேதுபதி பேசுகையில், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னை அவருக்கு தெரியுமா, தெரியாதா என்ற தயக்கத்துடன் தான் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவர் என்னை பற்றி இப்படி ஒரு வார்த்தை சொன்னதும் ஷாக் ஆகி விட்டேன் என கூறி இருந்தார்.

இப்போ ஷாருக்கிற்கே வில்லன்
முன்று ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு படத்தில் நடித்ததற்கே விஜய் சேதுபதியை, ஷாருக்கான் பாராட்டி உள்ளார். இந்த சமயத்தில் தற்போது ஜவான் படத்தில் இருவரும் ஒன்றாக நடிக்க போகிறார்கள். அதுவும் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றால் அந்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.