twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை ரோஜா முதல் ஆஸ்கர் ராஜாங்கம் வரை: சர்வதேச எல்லைகளைக் கடந்த ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டுகள்

    |

    சென்னை: 1992; வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான்.

    மணிரத்னம் இயக்கியிருந்த 'ரோஜா' படத்தில் அரவிந்த் சுவாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் படத்திலேயே, தேசிய விருது வென்று சாதனைப் படைத்தார்.

    ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இன்னும் ஒரு தரமான அப்டேட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இன்னும் ஒரு தரமான அப்டேட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்

    சிறகடித்த ரஹ்மான்

    சிறகடித்த ரஹ்மான்

    ஆரம்பம் முதல் இளையராஜாவுடன் மட்டுமே பணிபுரிந்து வந்த இயக்குநர் மணிரத்னம், 'ரோஜா' படத்தில் முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்தார். இளைஞரான ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு தான் அறிமுகம் இல்லாதவராக இருந்தாரேத் தவிர, திரைத்துறையினருக்கு திலீப் என்ற பெயரில் நன்கு பரீட்சையமானவரே. பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் 'ரோஜா' படத்திற்கு, புதியவர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றதும், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அவர்களுக்கு ரோஜா படத்தின் பாடல்கள் வெளியானபோது, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    தொட்டதெல்லாம் சூப்பர் ஹிட்

    தொட்டதெல்லாம் சூப்பர் ஹிட்

    ஆம்! ரோஜா பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. துல்லியமான இசை, புதுமையான மெட்டுக்கள் என அனைவரும் அதிர்ந்துபோய் நின்றனர். போதாக்குறைக்கு முதல் படத்திலேயே தேசிய விருதும் கிடைக்க, ரஹ்மான் செல்லும் இடமெல்லாம் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தான்.

    கோலிவுட்டில் இருந்து பாலிவுட்

    கோலிவுட்டில் இருந்து பாலிவுட்

    ரோஜாவைத் தொடர்ந்து புதிய முகம், ஜென்டில்மேன் என தூள் பறத்திய ரஹ்மான், பாலிவுட்டிலும் தனது இசை பாஸ்பரஸை பற்ற வைத்தார். 'ரங்கீலா' படத்தில் அவர் காட்டிய அதிரடி, ரஹ்மான் தமிழ் இசையமைப்பாளர் என்ற அடையாளத்தை கடந்து இந்தியாவின் அடையாளமாகிப் போனார். மணிரத்னம், ஷங்கர், கதிர், பாரதிராஜா, பாலசந்தர், கே.எஸ். ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குநர்களின் முதல் தேர்வில் ரஹ்மானின் பெயர் இடம்பெற்றது.

    பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்

    பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்

    லண்டனில் நடந்த 'பாம்பே ட்ரீம்ஸ்' என்ற மேடை நாடகத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதற்கு முன்னரே ரஹ்மானுக்கு ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்துவிட்டாலும், 'பாம்பே ட்ரீம்ஸ்' இன்னும் உச்சம் கொண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்த ரஹ்மான், 'ஸ்லம் டாங் மில்லியன். படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    30 ஆண்டுகள் நிறைவு

    30 ஆண்டுகள் நிறைவு

    கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் டாப் மியூசிக் டைரக்டராக வலம் வரும் ரஹ்மான், இதுவரை வாங்காத விருதுகளே இல்லை எனலாம். ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி அவர்டுகள் என ரஹ்மானின் சாதனைகள் ரொம்பவே அதிகமானது திரைப்பாடல்கள் மட்டும் இல்லாமல் ஆல்பங்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர் ரஹ்மான். அவரது இசையில் கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பத்து தல, மாமன்னன் என அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில், 30 ஆண்டுகளை நிறைவு செய்த ஆஸ்கர் நாயகனுக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

    English summary
    AR Rahman made his debut as a music director with Roja and has completed 30 years in the film industry. His fans are celebrating this ( ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X