»   »  சென்னை 28 மூன்றாம் பாகம்?

சென்னை 28 மூன்றாம் பாகம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவிருக்கிறதாம்.

சென்னை 28 மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. பிரியாணி, மாசு இரண்டு படங்களும் ஏமாற்றவே மீண்டும் தனது ஃபேவரிட் படமான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். கலகலவென நகர்ந்த சென்னை 28ஐ இந்த முறையும் ஏற்றுக்கொண்டனர் ரசிகர்கள்.

3rd sequel to Chennai 28?

அடுத்து யார் ஹீரோ, தொழில்நுட்ப கலைஞர்கள் என்று முடிவாகாமலேயே அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்துக்கு பூஜை போட்டார் வெங்கட்பிரபு. அந்த படம் சென்னை 28 இன் மூன்றாம் பாகம் என்று செய்தி வருகிறது.

வெங்கட் பிரபுவுடன் விவாதத்தில் இருக்கும் அவரது உதவியாளர்கள் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர்.

English summary
Director Venkat Prabhu is on discussion to make the 3rd sequel of his famous Chennai 28 hit series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil