»   »  ரசிகைகள் என்று கூறி சல்மானின் பொருட்களை ஆட்டையைப் போட்ட கில்லாடி பெண்கள்

ரசிகைகள் என்று கூறி சல்மானின் பொருட்களை ஆட்டையைப் போட்ட கில்லாடி பெண்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உங்களின் தீவிரமான ரசிகைகள் நாங்கள் என்று கூறி சல்மான் கானிடம் இருந்து அவரது பொருட்களை ஆட்டயப்போட்டு சென்றிருக்கின்றனர் கில்லாடி ரசிகைகள் 4 பேர்.

கடந்த வாரம் மும்பையில் நடந்த இரவு விருந்து ஒன்றில் சல்மான் கான் கலந்து கொண்டபோது அவரின் அருகே 4 பெண்கள் வந்து நாங்கள் உங்களின் தீவிர ரசிகைகள் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.

4 Female fans stole Salman Khan Belongings

சல்மானும் அவர்களிடம் நின்று பேசியிருக்கிறார் 1 பெண் மட்டும் சல்மானிடம் பேச மற்றவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சற்று நேரம் கழித்து சல்மான் தன் பொருட்களை தேடியபோது அந்தப் பொருட்கள் அனைத்தும் திருடு போன விவரம் அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவரது ரசிகைகள் என்று கூறிய அந்தப் பெண்கள் சல்மானின் கூலிங்கிளாஸ், பர்ஸ் மற்றும் பென்டன்ட் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

சல்மானின் பாதுகாவலர்கள் போலீஸிடம் புகார் கொடுக்க சொன்னபோது சல்மான் மறுத்து விட்டாராம். மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயமாக இந்த விருந்தில் கலந்து கொண்ட சக நடிகைகள் ஸ்ரேயா, சுஷ்மிதாசென் ஆகியோரின் பொருட்களையும் திருடிச்சென்று இருக்கின்றனர் அந்த கில்லாடி பெண்கள்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சல்மான் கான் தனது பாதுகாப்பு வீரர்களை அதிகப்படுத்தி இருக்கிறாராம், மேலும் தனது அருகிலேயே 2 பாதுகாப்பு வீரர்களை இருக்குமாறு செய்திருக்கிறாராம்.

சல்மானிடம் பெண்கள் திருடிச்சென்ற விஷயம் பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தபாங் நடிகர்கிட்டயே ஆட்டயப் போட்டு இருக்காங்களே..

English summary
4 Young Girls Approached Salman Khan who introduced themselves as huge fans of salman. Salman Chatted with them for a few minutes. After the girls left, later that he realized that all his personal belongings, which he had kept on the side table, were missing and so were the four fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil