»   »  வெறும் 67 ட்வீட்டுகள்... ஆனால் 4 மில்லியன் ஃபாலோயர்கள் ரஜினிக்கு!

வெறும் 67 ட்வீட்டுகள்... ஆனால் 4 மில்லியன் ஃபாலோயர்கள் ரஜினிக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ட்விட்டரில் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்தபோது, 'ட்விட்டரே ரஜினியைப் பின் தொடர்வதாக' ஒரு ட்விட்டை வெளியிட்டது அதன் நிர்வாகம். அந்த அளவு பரபரப்பு. விறுவிறுவென 3 மில்லியன் ஃபாலோயர்கள் சேர்ந்துவிட்டனர்.

ரஜினி பரபரப்பாக ஏதாவது சொல்வார், செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அந்த நேரம் கோச்சடையான் படம் வெளியாகவிருந்தது. கோச்சடையானுக்கு விளம்பரம் தேடவே அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கினால் என்று கூடச் சொன்னார்கள்.

4 Millions followers to Rajini in Twitter

ஆனால் ரஜினி அந்த ட்விட்டரை தன் சொந்த விளம்பரத்துக்காக பயன்படுத்தவே இல்லை. இன்று வரை அவர் வெறும் 67 ட்விட்கள்தான் வெளியிட்டுள்ளார். அவ்வளவும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், தலைவர்கள், கலைஞர்கள் மறைவுக்கு அஞ்சலிகள், ஜிஎஸ்டி போன்ற மக்கள் பிரச்சினைக்கான குரல் மட்டுமே. அவர் வெளியிட்ட ட்விட்டில் பலருக்கும் பிடிக்காதது, உடன்பாடில்லாதது 'புதிய இந்தியா பிறந்துவிட்டது' என பண ஒழிப்புக்கு ஆதரவளித்தது மட்டுமே.

இன்று ரஜினியின் ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டிவிட்டது. ட்விட்டர் வரலாற்றில் வெறும் 67 ட்விட் போட்ட பிரபலத்துக்கு 4 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பது ரஜினிக்கு மட்டும்தான் என்பது இன்னொரு சாதனை.

English summary
There are 4 millions followers for Rajinikanth in his Twitter handle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil