»   »  அஜீத்தின் 'என்னை அறிந்தால்' சூப்பர் ஹிட்டாக 4 காரணங்கள்

அஜீத்தின் 'என்னை அறிந்தால்' சூப்பர் ஹிட்டாக 4 காரணங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் படம் ஏன் ஹிட்டாகக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் ரிலீஸாக இன்னும் சில மணிநேரமே உள்ளது. இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் என்னை அறிந்தால் காய்ச்சலில் உள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் என்னை அறிந்தால் பேனர்கள், போஸ்டர்களை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்த படம் ஏன் ஹிட்டாகக்கூடும் என்பதற்கான காரணங்கள் வருமாறு,

அஜீத்-கௌதம் கூட்டணி

அஜீத்-கௌதம் கூட்டணி

அஜீத்-கௌதம் மேனன் சேர்ந்து பணியாற்றியுள்ளது இது தான் முதல் முறை. அஜீத் படங்களின் வசூலின் துவக்கம் சூப்பராக இருக்கும். கௌதம் படங்களின் துவக்கம் சுமாராக இருந்தாலும் அதன் பிறகு பிக்கப்பாகிவிடும். அஜீத்தின் மாஸும், கௌதமின் கிளாஸும் இந்த படம் வெற்றி பெற வழிவகுக்கும்.

தாமதம்

தாமதம்

என்னை அறிந்தால் படம் முதலில் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. அதன் பிறகு பொங்கலுக்கு ஐ படம் ரிலீஸானது. தற்போது இந்த படத்துடன் எந்த பெரிய படமும் ரிலீஸாகவில்லை.

கௌதம்- ஹாரிஸ்

கௌதம்- ஹாரிஸ்

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு பிரிந்த இயக்குனர் கௌதம் மேனனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் தற்போது என்னை அறிந்தால் படத்தில் தான் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. பிஜிஎம் படத்தை புதிய லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.

அஜீத்-த்ரிஷா

அஜீத்-த்ரிஷா

ஜி, கிரீடம், மங்காத்தா ஆகிய படங்களை அடுத்து த்ரிஷா அஜீத்துடன் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் என்னை அறிந்தால். அஜீத், த்ரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோடி ரசிகர்களிடையே ஏற்கனவே ஹிட்டடித்த ஜோடி ஆகும்.

English summary
Above are the reasons as to why Ajith starrer Yennai Arindhaal will be a huge hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil