»   »  இன்றைய ரீலீஸ்.. ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம், சகலகலா வல்லவன்

இன்றைய ரீலீஸ்.. ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம், சகலகலா வல்லவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை மூன்று படங்கள் வெளியாகின்றன. மூன்றுமே ஓரளவு கவனத்தை ஈர்க்கிற மாதிரி படங்கள் என்பதால், சினிமா ரசிகர்கள் மூன்றையுமே பார்க்கும் ஆர்வத்தில் உள்ளனர்.

ஆரஞ்சு மிட்டாய்

ஆரஞ்சு மிட்டாய்

நடிகராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படம் ஆரஞ்சு மிட்டாய். பிஜூ விஸ்வநாத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அவரே ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதுவரை பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி தோன்றுகிறார். இளம் வயதில் ஒரு முதியவர் வேடத்தில் துணிச்சலாக நடித்துள்ளார். கதை மேல் உள்ள அவரது நம்பிக்கை எந்த அளவு பலிக்கும் என்று பார்க்க வேண்டும்.


சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்துள்ள இந்தப் படம் காமெடி ஆக்ஷன் ஸ்பெஷலிஸ்ட் சுராஜின் இயக்கத்தில் வெளியாகிறது. நகைச்சுவைக்கு விவேக்கும், சூரியும் பொறுப்பேற்றுள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார்.


இடைவெளிக்குப் பிறகு...

இடைவெளிக்குப் பிறகு...

ஒரு இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் அதிரடியாக களமிறங்குகிறார்கள் சகலகலா வல்லவன் மூலம். இந்தப் படம் கொஞ்சநாள் காணாமல் போயிருந்த அஞ்சலியின் ரீ என்ட்ரி படம் எனலாம்.


இது என்ன மாயம்

இது என்ன மாயம்

சைவம் படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் தரும் புதிய படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளனர். உடன் விஜய்யும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.


நிராயுதன், த்ரிஷ்யம்

நிராயுதன், த்ரிஷ்யம்

இந்தப் படங்களுடன் பெரிதாக வெளியில் தெரியாத நிராயுதன் என்ற படமும் வெளியாகிறது. இந்தியில் அஜய் தேவ்கன் - ஸ்ரேயா நடித்துள்ள த்ரிஷ்யம் இந்தி ரீமேக்கும் இன்றுதான் வெளியாகிறது.


English summary
There are 4 straight Tamil movies are releasing this Friday (31st July) in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil