»   »  இன்று பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்!

இன்று பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த குழப்பமான சூழல் இன்று சற்றே நீங்கியுள்ளது. தடைகள் விலகி, ஒரு வழியாக நான்கு படங்கள் இன்று வெளியாகின்றன.

அவை விஷாலின் பாயும் புலி, அருண்பாண்டியன் தயாரித்த சவாலே சமாளி, போக்கிரி மன்னன் மற்றும் பானு. ஹாலிவுட் படம் ட்ரான்ஸ்போர்ட்டர்ஸும் இன்று ரிலீசாகிறது.


பாயும் புலி

பாயும் புலி

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இந்தப் படத்துக்கு புகழ்பெற்ற ரஜினி படத்தின் தலைப்பைச் சூட்டியுள்ளனர். படத்தின் விளம்பரத்துக்கு இது பெரிய அளவில் உதவியிருக்கிறது. காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். பெரிய இழுபறிக்குப் பிறகு இன்று வெளியாகிறது.


சவாலே சமாளி

சவாலே சமாளி

அருண்பாண்டியன் தயாரிப்பில் அசோக் செல்வன் பிந்து மாதவி நடித்துள்ள படம் இது. சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படம் 170 அரங்குகளில் வெளியாகிறது.


போக்கிரி மன்னன்

போக்கிரி மன்னன்

டான்ஸ் மாஸ்டராக இருந்த ஸ்ரீதர் ஹீரோவாக அறிமுகாகும் படம் போக்கிரி மன்னன். இந்திர வர்மன் இசையமைக்க, ராகௌ மாதேஸ் இயக்கியுள்ளார்.


பானு

பானு

2002-ல் நடந்த உண்மைச் சம்பவம் என்ற அறிவிப்போடு வருகிறது பானு. சீனு என்பவர் இயக்கியுள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனற்.


ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்

ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்

கேமிலி டிலாமரே இயக்கியுள்ள தி ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ் ரிப்யூயல்ட் படம் நேரடி தமிழ்ப் படத்துக்கு இணையாக அதிக அரங்குகளில் வெளியாகிறது. ஒரு ஆபத்தான பயணம் என இதனை தமிழ்ப்படுத்தியுள்ளனர்.


English summary
There 4 direct Tamil movies includinm Paayum Puli and a Hollywood movie are releasing this Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil