»   »  இன்று 4 புதுப் படங்கள் ரிலீஸ்... கார்த்தியைக் காக்குமா 'தோழா'?

இன்று 4 புதுப் படங்கள் ரிலீஸ்... கார்த்தியைக் காக்குமா 'தோழா'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

போகிற போக்கைப் பார்த்தால் ஜூன் மாதம் தொடங்கும் முன்பே தமிழ் சினிமா செஞ்சுரி போட்டு விடும் போலிருக்கிறது.

இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், கடந்த 24 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றில் ஒன்றோ இரண்டோதான் தேறியிருக்கின்றன.


இந்த சூழலில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் நான்கு புதுப் படங்கள் வெளியாகின்றன.


தோழா

தோழா

நாகார்ஜுனா - கார்த்தி நடித்துள்ள தோழா படம் ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்தது. தமிழ் - தெலுங்கில் பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு இன்னொரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் நிற்கும் நிலையில் இன்று படம் வெளியாகிறது.


கார்த்திக்கு முக்கியம்

கார்த்திக்கு முக்கியம்

இந்தப் படம் வெற்றிப் பெறுவது கார்த்திக்கு மிக முக்கியம். அவரது முந்தைய படங்கள் கொம்பன், மெட்ராஸ் நன்றாக ஓடியிருந்தாலும், நடிகர் சங்க அரசியலில் பிஸியாகிவிட்ட கார்த்தி படம் கொடுத்த ரொம்ப நாள் ஆகிவிட்ட மாதிரி ஒரு இமேஜ். எனவே இந்தப் படம் ஓடினால்தான் பாக்ஸ் ஆபீஸில் கார்த்தி என்ற குதிரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


வாலிப ராஜா

வாலிப ராஜா

சந்தானமும் சேதுவும் இணைந்து நடித்த இந்தப் படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ஏதேதோ காரணங்களால்.. அப்போ இப்போ என தள்ளிப் போய், சத்தமில்லாமல் வெளியாகிறது. சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ளார். கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்ற தலைப்போடு வந்திருக்கும் இந்தப் படத்துக்கு வெற்றி கிடைக்குமா? பார்க்கலாம்.


ஜீரோ

ஜீரோ

மோசர் பேயர், யு டிவி என இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகியாக இருந்த தனஞ்செயன் தனியாக தயாரித்திருக்கும் படம் இந்த ஜீரோ. ஷிவ் மோரா இயக்கியுள்ள இந்தப் படம் ஒரு ரொமான்டிக் த்ரில்லர் என்கிறார்கள்.


அடிடா மேளம்

அடிடா மேளம்

புதுமுக நாயகன் நாயகியுடன் தெரிந்த முகங்களான ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி நடித்துள்ள அடிடா மேளம் படத்தை அன்பு ஸ்டாலின் இயக்கியுள்ளார்.


பேட்மேன் Vs சூப்பர்மேன்

பேட்மேன் Vs சூப்பர்மேன்

இந்த தமிழ்ப் படங்களுடன் இன்று வெளியாகவிருக்கும் ஹாலிவுட் பிரமாண்டம் பேட்மேன் Vs சூப்பர் மேன். தமிழ், ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்கு தருவதை விட அதிக அரங்குகள் தந்திருக்கிறார்கள்.


English summary
Today there are 4 straight Tamil movies including Karthi's Thozha are releasing.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil