For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சகலமும் அறிந்த கமலின் சகலகலா வல்லவன்: 40 ஆண்டுகளாக ரசிகர்களை கிறங்கடித்து வரும் கமர்சியல் கண்டெய்னர்

  |

  சென்னை: கமலின் நடிப்பில் பல வெற்றிப் பெற்றாலும், சில படங்கள் தான் அவரை எல்லா தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சென்றது.

  கமலின் சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு குறைவு தான்.

  அப்படி அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களில் 'சகலகலா வல்லவன்' ரொம்பவே முக்கியமான திரைப்படம்.

  நாயகன் வந்துட்டார்...விதை நான் போட்டது...விசில் பறக்கும் கமலின் மாஸ் பேச்சு நாயகன் வந்துட்டார்...விதை நான் போட்டது...விசில் பறக்கும் கமலின் மாஸ் பேச்சு

  அசத்தல் கூட்டணி

  அசத்தல் கூட்டணி

  'சகலகலா வல்லவன்' படத்தின் முதல் வெற்றியே, அதில் இணைந்த மெகா கூட்டணி தான். ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தை டாப் மோஸ்ட் கமர்சியல் மாஸ்டர் எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாச்சலம் கதை, திரைக்கதை எழுத, இளையராஜா இசையமைத்திருந்தார். இதுக்கும் மேல், கமல், அம்பிகா, வி.கே ராமசாமி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்தனர்.

  டபுள் ஆக்சனில் கலக்கிய கமல்

  டபுள் ஆக்சனில் கலக்கிய கமல்

  'சகலகலா வல்லவன்' படத்தில் கமலின் கேரக்டர் ரசிகர்களை பெரிதாக ஈர்த்தது எனலாம். டபுள் ஆக்சனில் நடித்திருந்த கமல், ஒரு கேரக்டரில் குடுமி வைத்த கிராமத்து இளைஞராகவும், இன்னொன்றில் கோட் சூட் அணிந்த ஸ்டைலிஷான அமெரிக்க ரிட்டர்ன்ஸாகவும் கலக்கியிருப்பார். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் துளிகூட சம்பந்தமே இல்லாத வகையில், நடிப்பிலும், மேனரிசத்திலும் அசத்திருப்பார் கமல்.

  சிம்பிளான கமர்சியல் கதை

  சிம்பிளான கமர்சியல் கதை

  ‘சகலகலா வல்லவன்' படத்தில் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு, சென்டிமென்ட் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் இருந்தது. தங்கையைக் கெடுத்தவனுக்கே அவரை திருமணம் செய்து வைக்கப் போராடும் அண்ணனின் கதைதான் இந்தப் படம். அதேபோல், கமல், அம்பிகா ஜோடி இந்தப் படத்தில் பேசப்பட்டது. ஆனால் திரைக்கதையில் இருந்த மேஜிக், படத்தை ஆஹா ஓஹோவென கொண்டாட வைத்தது. எம்ஜிஆர் நடித்த ‘பெரிய இடத்துப் பெண்' படத்தின் கதையைத்தான், வேறொரு விதமாகக் எடுத்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. அதில் எம்ஜிஆரும் அக்காவும். இதில் கமலும் தங்கையும்!

  டெக்னிக்கலாக மிரட்டிய சகலகலா வல்லவன்

  டெக்னிக்கலாக மிரட்டிய சகலகலா வல்லவன்

  இளையராஜாவின் இசை ‘சகலகலா வல்லவன்' படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்', ‘நேத்து ராத்திரி யம்மா', ‘இளமை இதோ இதோ', 'கட்ட வண்டி கட்ட வண்டி' என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாக ரகளை செய்தது. குறிப்பாக இன்று வரையிலும் புத்தாண்டை வரவேற்க, ராஜாவும் கமலும் ‘இளமை இதோ இதோ' என சரியாக 12 மணிக்கு ஆஜராகி விடுகின்றனர். அதேபோல், ஜூடோ ரத்தினத்தின் சண்டைக் காட்சிகளெல்லாம் மிரட்டியெடுக்கும். ஒவ்வொரு சண்டையும் வெரைட்டியாகவும் அதிரடியாவும் இருக்கும்

  Recommended Video

  Mocobot-டை முதலில் பயன்படுத்தியது யார்? | Vikram | Interval Making Scene
  ஹவுஸ்ஃபுல்லாக வெள்ளிவிழா கொண்டாட்டம்

  ஹவுஸ்ஃபுல்லாக வெள்ளிவிழா கொண்டாட்டம்

  திரையிட்ட அனைத்துத் தியேட்டர்களிலும் நான்கு காட்சிகளிலும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கவிடப்பட்டது. தியேட்டருக்குள் படம் பார்க்கச் சென்றவர்களை விட, 3 மடங்கு கூட்டம் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றது. பெரும்பான்மையான ஊர்களில், 150 நாட்களைக் கடந்தும், வெள்ளிவிழா என்று சொல்லப்படும் 175 நாட்களைக் கடந்தும், சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடி, வசூலில் சாதனைப் படைத்தது. அதுவரை, ஏ அண்ட் பி செண்டர் ஹீரோவாக இருந்த கமலஹாசனை, ஏ, பி, சி என அனைத்து ஏரியாக்களுக்கும் கொண்டுசென்று கமர்ஷியல் ஹீரோவாகவும் வசூல் மன்னனாகவும் ஆக்கிய படம் தான் இந்த ‘சகலகலா வல்லவன்.'

  English summary
  'Sakalakala Vallavan' is one of the films that got Kamal a lot of acceptance from fans from all categories. Kamal fans are celebrating 40 years since the release of this film ( கமலுக்கு அனைத்துதரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுக்கொடுத்த படங்களில் ‘சகலகலா வல்லன்’ முக்கியமானது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 40 ஆண்டுகள் ஆனதை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.)
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X