»   »  தான் உல்லாசமாக இருக்க 400 சீடர்களின் ஆண்மையை நீக்கிய ராம் ரஹீம் சிங்

தான் உல்லாசமாக இருக்க 400 சீடர்களின் ஆண்மையை நீக்கிய ராம் ரஹீம் சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்டிகர்: சாமியாரும், நடிகருமான ராம் ரஹீம் சிங் 400 ஆண்களை மூளை சலவை செய்து அவர்களின் விதைப்பையை நீக்க வைத்துள்ளார்.

சாமியாரும், நடிகருமான ராம் ரஹீம் சிங் தனது பெண் சீடர்கள் பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரவித்துள்ளார்.

ஒரு குகைக்குள் வைத்து அவர் பல பெண்களை சீரழித்துள்ளார். இந்நிலையில் ராம் ரஹீம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் சீடராக இருந்த ஹன்ஸ்ராஜ் சவுகான்.

19 வயது

19 வயது

ஹன்ஸ்ராஜ் சவுகானுக்கு 13 வயது இருக்கும் போது அவரை ராம் ரஹீமின் ஆசிரமத்தில் அவரது தந்தை விட்டுள்ளார். 2000ம் ஆண்டு ஹன்ஸ்ராஜுக்கு 19 வயது இருக்கும்போது தேரா மருத்துவமனையில் அவரின் விதைப்பையை நீக்கியுள்ளனர்.

மயக்கம்

மயக்கம்

ஹன்ஸ்ராஜுக்கு பெப்ஸி கொடுத்துள்ளனர். அதை குடித்த ஹன்ஸ்ராஜ் மயக்கமானார். இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்த போது அவரது விதைப்பைகள் நீக்கப்பட்டது தெரிய வந்தது.

வழக்கு

வழக்கு

ராம் ரஹீம் ஹன்ஸ்ராஜ் போன்று 400 ஆண்களின் விதைப்பைகளை நீக்கியுள்ளார். ராம் ரஹீமின் நடவடிக்கையால் கோபம் அடைந்த ஹன்ஸ்ராஜ் நீதி கேட்டு 2014ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விதைப்பைகளை நீக்கினால் தான் கடவுளுக்கு நெருக்கமாகலாம் என்று சீடர்களை ஏமாற்றியுள்ளார் ராம் ரஹீம்.

உறவு

உறவு

ராம் ரஹீம் சிங் தனது பெண் சீடர்களுடன் ஆண் சீடர்கள் உறவு கொண்டுவிடக் கூடாது என்று அவர்களின் விதைப்பைகளை நீக்கியுள்ளார். பெண் சீடர்களில் பலரை ராம் ரஹீம் பலாத்காரம் செய்தபோதிலும் பின்விளைவுகளை நினைத்து பயந்து அவர்கள் வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்.

மூளைச்சலவை

மூளைச்சலவை

ராம் ரஹீம் சிங் தனது சீடர்களை மூளைச்சலவை செய்துவிடுவார். அதனால் யோசிக்கும் திறனை சீடர்கள் இழந்துவிடுவார்கள். ராம் ரஹீம் சொல்வதை மட்டுமே கேட்பார்கள் என்றார் ஹன்ஸ்ராஜ்.

English summary
Gurmeet Ram Rahim Singh persuaded 400 men to cut off their testicles and convinced them it's the only way to be purified and get closer to God. The gullible men fell for his trap and ended up being mass castrated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil