»   »  400 அரங்குகளில் கமலின் உத்தம வில்லன்!

400 அரங்குகளில் கமலின் உத்தம வில்லன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படம் தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியாகிறது.

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் பெரிய படங்களில் ஒன்று ‘உத்தம வில்லன்'.


இதில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.


இரட்டை வேடங்கள்

இரட்டை வேடங்கள்

உத்தமன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரம், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரம் என கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.


ரமேஷ் அரவிந்த்

ரமேஷ் அரவிந்த்

படத்துக்கு கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவருடைய நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. உத்தம வில்லன் திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.


400 அரங்குகள்

400 அரங்குகள்

தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியாகிறது. பெரும்பாலான நல்ல, பெரிய திரையரங்குகள் இந்தப் படத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.


உலகெங்கும்

உலகெங்கும்

உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களுக்கும் மேல் இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த படங்களில், ரஜினியின் லிங்காவுக்குப் பிறகு அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் படம் உத்தம் வில்லன்தான்.


English summary
Kamal Hassan's Uthama Villain is going to release in 400 screens in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil