தன்னை தானே செதுக்கியவன்...இணையத்தை அதிர வைத்த மாஸான விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபி

சென்னை : விஜய் தனது 48 வது பிறந்தநாளை ஜுன் 22 ம் தேதி கொண்டாட உள்ளார். இந்த பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அப்பாவும், பிரபல டைரக்டர், தயாரிப்பாளரான எஸ்.ஏ.சந்திரசேகரால் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார் விஜய். விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்த விஜய், நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

நடிகர், பாடகர், நடன கலைஞர் என பரிமாணங்களால் ரசிகர்ளின் மனங்களைக் கவர்ந்த விஜய், இன்று இளைய தளபதியாக, தளபதியாக ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார். சினிமாவில் படிப்படியாக உயர்ந்து இன்று ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக டாப் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார்.

வேற லெவல் கொண்டாட்டம்

வேற லெவல் கொண்டாட்டம்

விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடி வருகிறார்களோ, அதே போல் அவரது பிறந்தநாளையும் திருவிழா போல் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விஜய் ரசிகர்களால் பல நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவற்றை வழக்கம் போல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்

எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்

வழக்கமான கொண்டாட்டம் என்றாலும் இந்த ஆண்டு முன் கூட்டியே விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை துவங்கி உள்ளனர். வழக்கமாக விஜய்யின் ரசிகர்கள், அவர் நடிக்கும் படக்குழுவினர் தான் விஜய்யின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷலாக ஏதாவது செய்து அசர வைப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாள் எக்ஸ்டிரா ஸ்பெஷலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 தளபதி 66 டைட்டில், ஃபர்ஸ்ட்லுக்

தளபதி 66 டைட்டில், ஃபர்ஸ்ட்லுக்

விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜுன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரும், ஜுன் 22 ம் தேதி துவங்கும் போது நள்ளிரவு 12 மணிக்கு தளபதி 66 படத்தின் செகண்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட உள்ளதாம்.

டபுள் ட்ரீட் காத்திருக்கு

டபுள் ட்ரீட் காத்திருக்கு

இதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் முக்கிய அப்டேட்டும் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜுன் 22 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதனால் இந்த ஆண்டு விஜய் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.

48 பிரபலங்கள் வெளியிட்ட காமன் டிபி

48 பிரபலங்கள் வெளியிட்ட காமன் டிபி

தேர்தல் வெற்றி, அடுத்தடுத்து இரண்டு மாஸ் படங்கள் போன்ற காரணங்களால் விஜய்யின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படலாம் என கூறப்படுகிறது. ரசிகர்கள், படக்குழுவை தாண்டி இந்த ஆண்டு கோலிவுட்டே விஜய் பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக 48 பிரபலங்கள் சேர்ந்து விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தன்னை தானே செதுக்கியவன்

தன்னை தானே செதுக்கியவன்

தன்னை செதுக்குவது போன்று இந்த டிபி அமைக்கப்பட்டுள்ளது. நடுவில் பனியன் அணிந்தபடி, கையில் சுத்தியலுடன் கலரில் இருக்கும் விஜய். அதைச் சுற்றி பிளாக் அண்ட் ஒயிட்டில் வித விதமாக கெட்அப்களில் செதுக்கப்பட்ட விஜய்யின் உருவங்கள் இருப்பது போல் இந்த டிபி அமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தை தெறிக்க விட்ட ரசிகர்கள்

இணையத்தை தெறிக்க விட்ட ரசிகர்கள்

வெங்கட் பிரபு, பிரேம்ஜி, லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட 48 பிரபலங்கள் வெளியிட்ட இந்த காமன் டிபி வெளியான அடுத்த நிமிடமே ட்விட்டரில் #Thalapathy48BirthdayCDP என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதில் பிரபலங்களும், ரசிகர்களும் இப்போதே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவிக்க துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X