48 வயது நடிகையை படுக்கைக்கு அழைத்த 24 வயது தயாரிப்பாளர்

சென்னை : தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் சார்மிளா. 1979 ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த நல்லதொரு குடும்பம் என்ற படத்தின் முலம் நடிகையானவர்.

பிறகு 1991 ல் வெளியான ஒயிலாட்டம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானார். அதற்கு பிறகு தமிழ், மலையாள மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார்.

சினிமாவிற்கு நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே மலையாள நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் சார்மிளா.

இரண்டாவது முறையும் விவாகரத்து

இரண்டாவது முறையும் விவாகரத்து

பிறகு 2006 ம் ஆண்டு ராஜேஷ் என்ற இன்ஜினியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ஆனால் இரண்டாவது திருமண வாழ்க்கையும் சரியாக அமையாமல் அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது தனது மகனுடன் சார்மிளா வசித்து வருகிறார்.

 அம்மா ரோல்களில் சான்ஸ்

அம்மா ரோல்களில் சான்ஸ்

ஆரம்பத்தில் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தவர் சமீப ஆண்டுகளாக தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி போன்ற படங்களில் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடித்து வருகிறார் 48 வயதாகும் சார்மிளா. இந்நிலையில் சினிமா வாழ்க்கையில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓப்பனாக குறி இருந்தார் சார்மிளா.

 சார்மிளா ஓப்பன் பேட்டி

சார்மிளா ஓப்பன் பேட்டி

அந்த பேட்டியில், மலையாளத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஷுட்டிங் கோழிகோட்டில் நடந்துள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் 24 வயது இளைஞர்கள் தான். ஆரம்பத்தில் அவர்கள் அனைவரும் சார்மிளாவை அக்கா என்று தான் மலையாளத்தில் குப்பிட்டு வந்துள்ளனர்.

அட்ஜெஸ்மன்டிற்கு அழைத்த தயாரிப்பாளர்

அட்ஜெஸ்மன்டிற்கு அழைத்த தயாரிப்பாளர்

ஆனால் ஷுட்டிங் ஆரம்பித்த 3 நாட்களில், அவர்களின் அசிஸ்டென்ட்டை அனுப்பி அட்ஜெஸ்மன்டிற்கு அழைத்துள்ளனர். இதற்காக 50,000 வரை பேரம் பேசி உள்ளனர். அதோடு விடாமல், அவர்களில் விருப்பமான ஒருவரை தேர்வு செய்து, அவருடன் படுக்கையை பகிரும் படி கேட்டுள்ளனர்.

 உங்களுக்கு என் மகன் வயசு

உங்களுக்கு என் மகன் வயசு

அதற்கு சார்மிளா, உங்களுக்கு என் மகனை விட கொஞ்சம் தான் வயது அதிகம். அதனால் என்னை அம்மா ஸ்தானத்தில் வைத்து பாருங்கள் என அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து சார்மிளாவை வற்புறுத்தி உள்ளனர். இதனால் அந்த படத்தில் நடிக்க மறுத்து, உடனடியாக ஃபிளைட்டை பிடித்து சென்னைக்கு திரும்பி விட்டாராம்.

பலருக்கும் இதுதான் நடக்கிறது

பலருக்கும் இதுதான் நடக்கிறது

நடிகைகள் தனியாக வசிப்பவர்களாக இருந்தால் சிறிய வயதில் இருப்பவர்கள் கூட லவ் ப்ரொபோஸ் செய்கிறார்கள். பிறகு படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்களின் தேவை தீர்ந்ததும் காணாமல் போய் விடுவார்கள். இது போன்ற பிரச்சனைகளை சினிமா துறையில் பலரும் எதிர்கொண்டு வருகிறார்கள் என ஓப்பனாக பேசினார் சார்மிளா.

More from Filmibeat

Read more about: sharmila actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X