»   »  ஆக்ஷன்.. ஆக்ஷன்.. ஆக்ஷன்.. அதிரடியாக வர்றாரப்பா கவுண்டரு...!

ஆக்ஷன்.. ஆக்ஷன்.. ஆக்ஷன்.. அதிரடியாக வர்றாரப்பா கவுண்டரு...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரொம்ப நாளாச்சு.. கவுண்டமணியின் கடகட அதிரடி வெள்ளப் பேச்சைக் கேட்டு.. இதோ வந்துட்டாருல்ல.. 49 ஓ மூலம்.

டிரெய்லரே டெர்ரரா இருக்குங்க.. ஏதோ ரஜினி பட டிரெய்லர் போல, விஜய் பட டிரெய்லர் போல.. செமையாக கொளுத்திப் போட்டிருக்காங்க


பக்கா அதிரடியாக இருக்கிறது டிரெய்லர். இசையும், பாடலும் தூக்கலாக இருந்தால், அதை தூக்கிச் சாப்பிடும் வகையில், கவுண்டமணியின் அதே அதிரடி பாணி பேச்சும் வசனமும் செமையா இருக்கு மக்கா!


49 ஓ

49 ஓ

கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை நாயகனாக நடித்துள்ள படம் 49 ஓ. தயாராகி பல காலமாகியும் கூட வெளிவராமல் இருந்த இந்தப் படம் தற்போது வெடித்துக் கிளம்பி திரைக்கு வரத் தயாராகி விட்டது.


தேர்தல் களம்

தேர்தல் களம்

தேர்தலும் அதையொட்டி அரசியல்வாதிகள் அரங்கேற்றும் ஊழல்களும், முறைகேடுகளும், டகால்ட்டிகளும்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.


அதே கவுண்டமணி

அதே கவுண்டமணி

படம் முழுக்க கவுண்டமணி தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பது டிரெய்லரிலேயே பளிச்சிடுகிறது. அது சரி அவரது படத்தில் அவரைத் தவிர வேறு யாருக்காவது அவரைத் தாண்டி நடித்து அசத்தி விட முடியுமா என்ன...


காசுக்கு ஓட்டு.. ஓட்டுக்கு காசு

காசுக்கு ஓட்டு.. ஓட்டுக்கு காசு

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோரின் பொட்டில் பொளேர் என்று அடிக்கும் கதைதான் இப்படத்தின் கதை. அதேபோல மக்களின் ஓட்டுக்களை காசு கொடுத்து வாங்கி கடைசியில் அவர்களுக்கு ஆப்படிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதில் ஆப்படிக்கிறார் கவுண்டமணி.


யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை

49 ஓ என்ற யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ஆப்ஷன் குறித்த விழிப்புணர்வுப் படமாகவும் இது அமைந்திருக்கிறதாம்.


நான் கடவுள் ராஜேந்திரன்

நான் கடவுள் ராஜேந்திரன்

படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து அசத்தியுள்ளார் நான் கடவுள் ராஜேந்திரன். கவுண்டமணி வழக்கமாக செந்திலுக்குக்குக் கொடுக்கும் செல்ல அடியை இந்தப் படத்தில் ராஜேந்திரன் வாங்கியுள்ளார்.


கவுண்டர் அடியில் திருந்தினால் நல்லது

யார் வாங்கினால் என்ன, கவுண்டர் கொடுக்கும் அடி நிச்சயம் மக்கள் மனதிலும் விழுந்து, அதனால் சிலராவது திருந்தினால் நல்லதுதானே!


கமான் கவுண்டரே கமான்!English summary
Goundamani is rocking in 49 O trailer. The comedy king is returning through this political satire after a big break.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil