»   »  49 ஓ, எவேஎகிகி, எலி, பாலக்காட்டு மாதவன், இனிமே இப்படித்தான்... இந்த மாசம் பூரா சிரிப்பு மழை!

49 ஓ, எவேஎகிகி, எலி, பாலக்காட்டு மாதவன், இனிமே இப்படித்தான்... இந்த மாசம் பூரா சிரிப்பு மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காமெடி நடிகர்கள் முழு நேர நாயகர்களாக மாறும் காலம் இது. அந்த வகையில் நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் ஹீரோக்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் ஹீரோக்களாக நடித்த 5 சிரிப்புப் படங்கள் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்துக்குள் ரிலீஸ் ஆகப் போகின்றன என்பது அவர்களின் ரசிகர்களுக்கு எத்தனை கொண்டாட்டமான செய்தி.

49 ஓ

49 ஓ

கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களின்போதே வந்திருக்க வேண்டிய படம் இது. அப்போது வெளியான கவுண்டமணியின் அரசியல் பஞ்சுகளுடன் கூடிய இந்தப் படத்தின் ட்ரைலருக்கு அமோக வரவேற்பு இருந்தது. அதைப் பயன்படுத்தி வெளியிடத் தவறிவிட்டனர். சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது (எவேஎகிகி)

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது (எவேஎகிகி)

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. துவங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த மாதம் வெளியிடப் போவதாக விளம்பரங்கள் வர ஆரம்பித்துள்ளன. பாலமுருகன் என்ற புதியவர் இயக்கியுள்ளார்.

எலி

எலி

தெனாலிராமனுக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாகக் களமிறங்கியுள்ள படம் எலி. யுவராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இரு ட்ரைலர்களுமே, படம் சிரிப்புக்கு நூறு சதவீதம் கேரண்டி என்று சொல்கின்றன. வரும் ஜூன் 19-ம் தேதி கடும் போட்டிக்கிடையே படம் வெளியாகிறது.

பாலக்காட்டு மாதவன்

பாலக்காட்டு மாதவன்

விவேக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வாலும் நடித்துள்ள இந்தப் படமும் இந்த மாதமே வெளியாகவிருக்கிறது. சந்திரமோகன் இயக்கியுள்ளார்.

இந்தப் படமும் ஜூன் மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமே இப்படித்தான்

இனிமே இப்படித்தான்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படம் இனிமே இப்படித்தான். படத்தின் தொடக்க விழா அறிவிப்பு வந்ததிலிருந்து படம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்வரை எந்த தடையும், சிக்கலும் இல்லாமல் பரபரவென படம் முடிந்துவிட்டது. வரும் ஜூன் 12-ம் தேதி பெரிய அளவில் வெளியாகவிருக்கிறது. முருகானந்தம் இயக்கியுள்ளார்.

English summary
There are 5 comedy movies with top comedians like Goundamani, Vadivelu, Vivek and Santhanam are releasing this month.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil