பிரம்மன், ஆஹா கல்யாணம் உள்பட 5 புதுப்படங்கள் இன்று ரீலீஸ்!

By Shankar

இந்த வெள்ளிக்கிழமை பிரம்மன், ஆஹா கல்யாணம் உள்பட 5 புதுப்படங்கள் வெளியாகின்றன.

பிரம்மன்

பிரம்மன்

சசிகுமார் - லாவண்யா, சந்தானம், சூரி நடித்துள்ள படம் பிரம்மன். சசிகுமாருக்கு இதில் ரொமான்டிக் ஹீரோ வேடம். முதல்முறையாக சந்தானமும் சூரியும் ஒரு படத்தில் நடிப்பதும் இதுவே முதல்முறை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, கன்னட தயாரிப்பாளர் மஞ்சு முதல் முதலாக தயாரிக்கும் தமிழ்ப் படம் இது!

ஆஹா கல்யாணம்

ஆஹா கல்யாணம்

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் ஆஹா கல்யாணம். நானி - வாணி கபூர் நடித்துள்ளனர். கோகுல கிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாண்ட் பஜா பாரத் படத்தின் ரீமேக் இது.

வெண்மேகம்

வெண்மேகம்

விதார்த், இஷாரா நடித்துள்ள வெண்மேகம் ஒரு வித்தியாசமான கதைக் களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ராம் லக்ஷ்மண் என இரட்டையர்கள் இயக்கியுள்ள படம் இது.

சித்திரைத் திங்கள்

சித்திரைத் திங்கள்

அஸ்வந்த், தீரன், ஸ்ரீரேகா நடிப்பில், ஆர். மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சித்திரைத் திங்கள். எல்லாருமே புதுமுகங்கள். காதல்தான் மையக் கரு.

நிலா காய்கிறது

நிலா காய்கிறது

புதுமுகம் பிரபு எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘நிலா காய்கிறது'. கிரீன் மூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவும் புதுமுகங்களின் படம்தான்.

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம்

கே.உமா சித்ரா எழுதி இயக்கியிருக்கும் படம் இந்த மனைவி அமைவதெல்லாம். சாந்த துர்க்கை அம்மன் மூவிஸ் தயாரித்துள்ளது.

இந்த வாரம் வெளியாகவிருந்த அங்குசம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X