»   »  இன்று ஐந்து படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பைக் கிளப்பும் யாகாவராயினும் நாகாக்க!

இன்று ஐந்து படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பைக் கிளப்பும் யாகாவராயினும் நாகாக்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பண்டிகையில்லை.. விசேஷ தினமில்லை... ஆனாலும் இந்த வெள்ளிக்கிழமை எக்கச்சக்க படங்கள் வெளியாகின்றன.

ஒன்றிரண்டல்ல..ஐந்து புதுப்படங்கள். முதலில் ஒன்பது படங்கள் வரவிருந்தன. அவற்றில் நான்கு படங்கள் பின் வாங்கியதால் இப்போது ஐந்து படங்கள்.


இவற்றில் யாகாவராயினும் நாகாக்க மற்றும் காவல் படங்கள் அதிக எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களாக உள்ளன.


யாகாவராயினும் நாகாக்க...

யாகாவராயினும் நாகாக்க...

நல்ல தூய தமிழில், வள்ளுவரின் வரிகளைத் தலைப்பாக்கி வந்திருக்கும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டி தயாரித்துள்ளார். அவரது ஒரு மகன் ஆதி நாயகனாக நடிக்க, இன்னொரு மகன் சத்ய பிரபாஸ் இயக்கியுள்ளார். பக்கா ஆக்ஷன் வகைப் படம் இது. நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ளார். ஆதிக்கு வேறு பரிமாணம் தரும் என்ற நம்பிக்கையுடன் அவர் தந்தை களமிறங்கியிருக்கிறார்.


கிட்டத்தட்ட 200 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.காவல்

காவல்

நாகேந்திரன் இயக்கத்தில், விமல் - கீதா, சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் காவல். புன்னகைப் பூ கீதா தயாரித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியானதிலிருந்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை

விஷ்ணு விஷால் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகும் படம் இன்று நேற்று நாளை. விஞ்ஞானப் பின்னணியில் வரும் கதை என்பதால் ஓரளவு எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது. 150 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.


மூணே மூணு வார்த்தை

மூணே மூணு வார்த்தை

எஸ் பி சரண் தயாரிக்க, மதுமிதா இயக்கத்தில் வெளியாகும் படம் மூணே மூணு வார்த்தை. அர்ஜூன் சிதம்பரம், அதிதி செங்கப்பா, கே பாக்யராஜ் நடித்துள்ளனர்.


லொடுக்கு பாண்டி

லொடுக்கு பாண்டி

கருணாஸ் நாயகனாக நடித்துள்ள படம் லொடுக்கு பாண்டி. ரஜனீஷ் இயக்கியுள்ளார். வி சரவணன் தயாரித்துள்ளார்.


English summary
There are 5 direct new movies are releasing this Friday in Kollywood, including Yagavarayinum Naakakka, Kaaval.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil