»   »  சென்னை 28... 2ம் பாகத்தின் கிளைமேக்ஸை இயக்கும் 5 இயக்குநர்கள்

சென்னை 28... 2ம் பாகத்தின் கிளைமேக்ஸை இயக்கும் 5 இயக்குநர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை 600028 - தமிழத் திரையுலகில் புதிய பாதையை வகுத்த படம். இளைஞர்கள் கூட்டத்தை வைத்து இப்படத்தை இயக்கி அசத்தியிருந்தார் வெங்கட் பிரபு. இப்படம் கொடுத்த வெற்றியை பின்னர் அவர் பெரிய அளவில் தக்க வைக்கத் தவறினார். இடையில் மங்காத்தா வந்து வெங்கட் பிரபுவைக் காப்பாற்றியது.

இந்த நிலையில் சென்னை 28 படத்தின் 2வது பாகத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அதே நட்சத்திரக் கூட்டம் இதிலும் நடிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

5 directors for Venkat Prabhu's Chennai 600028

இப்படத்தில் தற்போது ஒரு விசேஷம் அரங்கேறப் போகிறது. அதாவது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஐந்து இயக்குநர்கள் சேர்ந்து இயக்கவுள்ளனராம். அவர்கள் ஐந்து பேரும் வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவியாளர்கள் என்பது முக்கியமானது.

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சரவண ராஜன், ஸ்ரீபதி, சந்துரு, நாகேந்திரன் ஆர் ஆகியோர்தான் அந்த இயக்குநர்கள். படம் நட்பை மையமாக வைத்தது. அந்த வகையில் இந்த வித்தியாசமான முயற்சியும் கூட அதில் இணைந்துள்ளது என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

English summary
Venkat Prabhu is busy canning the climax for 'Chennai 600028 II Innings'. And the highlight is that five filmmakers have joined hands with him for shooting the portion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil