»   »  ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் அதர்வாவின் 5 ஹீரோயின்களும்!

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் அதர்வாவின் 5 ஹீரோயின்களும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஓடம் இளவரசு இந்தப் படத்தை இயக்குகிறார்.

அதர்வா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக 5 நாயகிகள் நடிக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநர் ஓடம் இளவரசு பேசுகையில், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை நாங்கள் மதுரையில் நடத்தினோம். அங்கே அதர்வா, ரெஜினா மற்றும் அதீதி ஆகியோரின் பகுதியை படமாக்கினோம்.

ஊட்டி படப்பிடிப்பில்

ஊட்டி படப்பிடிப்பில்

படப்பிடிப்பில் ரெஜினாவும் , அதீதியும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து கேரளாவுக்கு டூர் சென்றார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. அதில் அதர்வா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரணீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஐஸ்வர்யாவும் , ப்ரணிதாவும் படப்பிடிப்பின் போது நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். படப்பிடிப்பின் அனைவரும் நன்றாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நன்றாக நடித்தனர். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமையாக இருக்கும்.

மரியாதை

மரியாதை

ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் எல்லோருடைய கதாபாத்திரத்திலும் இருந்து வேறுபட்டு புதுமையாக இருக்கும். ரெஜினாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் இப்படத்தில் அவர் மதுரை பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா , ஐஸ்வர்யா , ப்ரணிதா மூவரும் ஊட்டியில் படிக்கும் கல்லூரி நண்பர்கள். ரெஜினா மற்றும் அதீதி ஆகியோர் அதர்வாவின் பக்கத்து வீட்டில். குடியிருக்கும் பெண்களாக வருகிறார்கள். படத்தில் 5தாவதாகவும் ஒரு ஹீரோயின் உள்ளார் அவருடைய பெயர் நேஹா மாலிக். அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் நாங்கள் பார்ட் - 2வுக்கு லீட் வைத்துள்ளோம்.

காதல் கதை

காதல் கதை

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படமும் பெண்களின் முதல் காதல் பற்றி அழுத்தமான ஒரு உணர்வை தரும். முதல் காதல் தான் சிறந்த காதல் என்பதை திரைக்கதையின் மூலம் அழுத்தமாக கூறியுள்ளோம்.

கொஞ்சம் க்ளாமர், நிறைய முத்தங்கள்

கொஞ்சம் க்ளாமர், நிறைய முத்தங்கள்

படத்தில் பாடல் காட்சிகளில் மட்டும் தான் கொஞ்சம் கிளாமர் இருக்கும். முத்தக் காட்சி இருக்கும். ஆனால் விரசமாக இருக்காது. படத்தில் நான்கு கதாநாயகிகளுக்கும் நான்கு பாடல் இருக்கும்.

2 காட்சிகள் தவிர்த்தபு

2 காட்சிகள் தவிர்த்தபு

2 காட்சிகளைத் தவிர்த்து படத்தில் எல்லா காட்சிகளிலும் அதர்வா இருப்பார். படத்தில் மொத்தம் 74 காட்சி அதில் 72 காட்சியில் அதர்வா இருப்பார். படத்தின் எல்லா காட்சிகளிலும் ரொமான்டிக் காமெடி, காமெடி இருந்து கொண்டே இருக்கும். படத்தில் சீரியஸான காட்சி இரண்டு தான் அந்த காட்சிகளில் அதர்வா இருக்க மாட்டார், என்றார்.

English summary
Gemini Ganesanum Suruli Rajanum is the title of a new romcom movie starring Atharva

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil