twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துவைச்ச துணியையே துவைப்போம்".. இதுதான் இப்போ டிரெண்ட்...பிஸியான கோலிவுட் டைரக்டர்கள்!

    |

    சென்னை : சமீப காலமாக அனைத்து மொழிகளிலும் ரீமேக் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அப்படி ரீமேக் செய்யப்படும் படங்கள் வெற்றியும் அடைந்துள்ளன. இதனால் பான் இந்தியா படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஓராண்டாகியும் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை..மிஸ் யூ சுஷாந்த்.. நினைவு நாளில் உருகும் ரசிகர்கள்!ஓராண்டாகியும் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை..மிஸ் யூ சுஷாந்த்.. நினைவு நாளில் உருகும் ரசிகர்கள்!

    மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதில் அனைத்து மொழி டைரக்டர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி பல மொழிகளில் ரீமேக் படங்களை இயக்குவதில் லேட்டஸ்டாக பிஸியாக இருக்கும் டைரக்டர்களைப் பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.

    தியேட்டர் திறந்த உடனே... ராக்கி படம் குறித்த ரசிகர் கேள்வி... சூப்பர் பதில் கொடுத்த விக்னேஷ் சிவன் தியேட்டர் திறந்த உடனே... ராக்கி படம் குறித்த ரசிகர் கேள்வி... சூப்பர் பதில் கொடுத்த விக்னேஷ் சிவன்

    ஷங்கர்

    ஷங்கர்

    டைரக்டர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்க உள்ளார். அதே சமயம் பெயரிடப்படாத படம் ஒன்றை ரன்வீர் சிங்கை வைத்து இயக்க உள்ளார். இது 2005 ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் தான். இந்த படம் பற்றி ஷங்கர் அறிவித்ததும், லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது ஒரு பக்கம் இருந்தாலும், நெட்டிசன்களே பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விக்ரம் நடித்த 3 விதமான ரோல்களை வேறு ஒரு நடிகரால் அந்த அளவிற்கு நடிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றனர்.

    புஷ்கர் - காயத்ரி

    புஷ்கர் - காயத்ரி

    விக்ரம் வேதா படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க போவதாக பல நடிகர்களின் பெயர்கள் இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. லேட்டஸ்ட் தகவலாக விஜய் சேதுபதி நடித்த ரோலில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் நடித்த ரோலில் சைஃப் அலிகானும் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தான் இந்தியிலும் இந்த படத்தை இயக்க உள்ளனரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

    மோகன் ராஜா

    மோகன் ராஜா

    டைரக்டராக சமீபத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த மோகன் ராஜா, அடுத்ததாக தெலுங்கு படம் எடுக்க போகிறார். அதுவும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153 வது படத்தை இயக்க போகிறார். இது மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக். ராஜாவின் முதல் படமும் தெலுங்கு படம் தான். அதுவும் மலையாள படத்தின் ரீமேக் தான். அத்துடன் தனி ஒருவன் படத்தின் அடுத்த பாகத்தையும் மோகன் ராஜா இயக்க போவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    ஆர்.கண்ணன்

    ஆர்.கண்ணன்

    டைரக்டர் கண்ணன், கடைசியாக சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தை இயக்கி இருந்தார். தற்போது மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கி உள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் கடந்த ஆண்டு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த ரீமேக் படத்தில் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    அருண்ராஜா காமராஜ்

    அருண்ராஜா காமராஜ்

    தனது முதல் படமே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தை இயக்கி தனது திறமையை நிரூபித்தவர் அருண்ராஜா காமராஜ். தற்போது இந்தியில் வெளிவந்த ஆர்டிக்கிள் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தமிழில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தியில் இஷா தல்வார் நடித்த ரோலில் தான் தன்யா நடிக்க உள்ளாராம்.

    English summary
    some directors in Kollywood who are currently working on remakes from different language films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X