twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல வெற்றிப்படங்கள் கொடுத்தும்.. தமிழ் சினிமாவில் ஓரம் கட்டப்பட்ட .. இளம் நடிகர்கள் !

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களாக கொடிகட்டி பறந்து வருவார்கள். இவ்வாறு நல்ல நடிகர்களை தமிழ்த் திரையுலகம் என்றுமே கைவிட்டதில்லை.

    இந்நிலையில் தமிழ் திரைப்படத் துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தும் இப்போது சரியான படங்கள் ஏதும் அமையாமல் தமிழ் சினிமா ஒரு சில நடிகர்களை ஓரம் கட்டி வைத்துள்ளது.

    அவ்வாறு திறமை இருந்தும் அதற்கான சரியான அங்கீகாரம் கொடுக்காமல் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத ஐந்து சிறந்த இளம் தமிழ் நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

    கணவருக்கும் பேஷியல் செய்து அழகு பார்த்த இஷிதா தத்தா.. வைரலாகும் புகைப்படம் !கணவருக்கும் பேஷியல் செய்து அழகு பார்த்த இஷிதா தத்தா.. வைரலாகும் புகைப்படம் !

    பேசப்படும் நடிகர்

    பேசப்படும் நடிகர்

    தமிழ் திரைத்துறையில் நல்லா நடிக்க தெரிந்த நடிகர்களை விரல் விட்டு எண்ணினால் அதில் நிச்சயம் ஜீவா இருப்பார். இவரின் நடிப்பில் வெளியான ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, ஈ போன்ற பல படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றளவும் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டு வருகிறது.

    சிறந்த நடிகருக்கான விருது

    சிறந்த நடிகருக்கான விருது

    இந்நிலையில் தமிழ்த் திரையுலகம் இவரை சரியாக பயன்படுத்தவில்லை, இல்லையென்றால் இவர் தற்பொழுது தமிழில் ஒரு உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நிச்சயம் இருந்திருப்பார். சிப்ரஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பின் சிறந்த நடிப்பிற்காக விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர் ஜீவா மட்டுமே. இவர் ராம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

    துடிப்பான நடிகர்

    துடிப்பான நடிகர்

    தமிழ்நாட்டில் சிம்புவை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு சிறுவயது முதல் இன்று வரை தனது துடிப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து என்றும் அழியாத ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். மன்மதன், வல்லவன், கோவில், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த சிம்பு நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், நடனத்தில் சிறந்தவராகவும் என பல திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றியுடன் வலம் வந்தார்.

    எதிர்பார்க்கும் ரசிகர்கள்

    எதிர்பார்க்கும் ரசிகர்கள்

    இவ்வளவு பல திறமைகள் இருப்பதாலோ என்னவோ இவரின் மேல் சர்ச்சைகள், படபிடிப்பு புகார்கள் எனப் பல பிரச்சினைகள் இவரை சுற்றி நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு திறமையான நடிகர் அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்தவர் தற்பொழுது படங்கள் சரிவர கவனம் செலுத்தாமல் இருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினரும் அவரின் ரீ என்ட்ரியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பெண் ரசிகர்கள் அதிகம்

    பெண் ரசிகர்கள் அதிகம்

    பெண் ரசிகர்களை அதிகமாக கொண்ட தமிழ் ஹீரோக்களில் இவரும் ஒருவர். சினிமாவில் அறிமுகமாகி ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த ஜெயம் ரவி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். தமிழில் அரவிந்த் சாமி, மாதவன் போன்ற பெண்களுக்கு பிடித்த ஹீரோக்களில் பட்டியலில் ஜெயம் ரவியும் இணைந்திருந்தார்.

    வித்தியாசமான திரைப்படம்

    வித்தியாசமான திரைப்படம்

    தொடர்ந்து ஏறு முகங்களை கொண்டு வலம் வந்த ஜெயம் ரவியின் தற்போதைய படங்கள் எதுவும் அவருக்கு சரிவர கைகொடுக்கவில்லை. இந்தியாவிலேயே முதல் முதலாக டிக் டிக் டிக் என்ற ஸ்பேஸ் திரைப்படத்தில் நடித்த முதல் நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களிலும் கதைகளிலும் நடித்து வரும் ஜெயம் ரவிக்கு தமிழ் திரையுலகம் கொடுத்திருக்கும் இந்த இடம் சரியான இடம் அல்ல. மேலும் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் பூமி, ஜனகனமன, பொன்னியின் செல்வன் போன்ற இவரின் படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.

    சாக்லேட் பாய்

    சாக்லேட் பாய்

    நடிகர், தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என பல முகங்களை கொண்ட நடிகர் ஆர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடித்த தமிழ் படங்கள் பலவும் வெற்றியடைந்து இவரை ட்ரீம் பாய் மற்றும் சாக்லேட் பாய் போன்ற கேட்டகிரியில் வைத்து மக்கள், குறிப்பாக பெண்கள் கொண்டாடி வந்தனர்.

    சரியான அங்கீகாரம் இல்லை

    சரியான அங்கீகாரம் இல்லை

    நான் கடவுள், சர்வம், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல வித்தியாசமான படங்களில் கதைக்கேற்ற போல் தன்னை உருவாக்கிக் கொண்டு நடிப்பதில் இவர் வல்லவர். இவ்வாறு எந்த ஒரு கதையாக இருந்தாலும் தன்னை அதற்காக மெருகேற்றிக் கொண்டு அந்தக் கதைக்கு தகுந்தார் போல் மாற்றிக்கொள்ளும் இவருக்கு தமிழ் சினிமா ஏனோ இன்னும் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை. ராஜா ராணிக்கு பின் இவர் நடித்த அனைத்து படங்களுமே சுமாரான வெற்றியையும் தோல்வியையும் மட்டுமே தழுவி வருகிறது. இந்நிலையில் இவர் 3 தேவ், டெட்டி மற்றும் பா ரஞ்சித் இயக்கத்தில் சல்பேட்டா போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

    அட்டக்கத்தி தினேஷ்

    அட்டக்கத்தி தினேஷ்

    தமிழில் இவர் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இதற்கு முன் ஆடுகளம் போன்ற ஓரிரு படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் பல போராட்டங்களுக்கு பிறகு அட்டகத்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. குக்கூ, விசாரணை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மேலும் தற்போது வெளியான குண்டு போன்ற வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான நடிப்பு திறமையை இன்றளவும் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் இவருக்கு தமிழ் சினிமா ஏனோ இன்னும் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை,

    English summary
    5 Most underused actors in tamil cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X