»   »  மிருதன், தாரை தப்பட்டை, இது நம்ம ஆளு மற்றும் கதகளி... பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்

மிருதன், தாரை தப்பட்டை, இது நம்ம ஆளு மற்றும் கதகளி... பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிருதன், தாரை தப்பட்டை, கதகளி, இது நம்ம ஆளு மற்றும் ஒரு நாள் கூத்து ஆகிய படங்கள் பொங்கலன்று களத்தில் மோதக் காத்திருக்கின்றன.

மேலே சொன்ன படங்கள் வெளியாவதன் மூலம் ஜெயம் ரவி, சசிகுமார், விஷால், சிம்பு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் தங்களது படங்களின் மூலம் நேரடியாக மோதுகின்றனர்.


பொங்கலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் இத்தனை படங்கள் வரிசைகட்டி நிற்பது பலத்த போட்டிக்கான அறிகுறியாகவே தோன்றுகிறது.


எனினும் படத்தை வெளியிடுபவர்கள் இதனைப் பற்றி கவலைப்படாததால் நாம் மேலே சொன்ன படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


மிருதன்

மிருதன்

ஜெயம் ரவி,லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மிருதன். தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தை சக்தி சவுந்தர்ராஜன் இயக்க, டி. இமான் இசையமைத்திருக்கிறார். வேதாளம் வெற்றிக்குப் பின்னர் லட்சுமி மேனனும், தனி ஒருவன் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவியும் இணைந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் தமிழ்நாடு முழுவதும் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸ் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


கதகளி

கதகளி

பாயும் புலி படத்திற்குப் பின்னர் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கதகளி. விஷால், கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் கதகளி படத்தை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு - நயன்தாரா நடிப்பில் நீண்ட நாட்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இது நம்ம ஆளு பொங்கல் ரேஸில் களம் காணுகிறது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் துணிந்து படத்தை வெளியிடுகிறார் படத்தின் நாயகனும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சிலம்பரசன்.


தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

கரகாட்டத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் தாரை தப்பட்டையில் நாயகன், நாயகியாக சசிகுமார் - வரலட்சுமி நடித்திருக்கின்றனர். பரதேசி படத்திற்குப் பின்னர் பாலா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

அட்டக் கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா மற்று கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு நாள் கூத்து. நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருகிறார். கதை மீது உள்ள நம்பிக்கையால் பொங்கல் களத்தில் துணிந்து களமிறங்குகிறது ஒரு நாள் கூத்து.


பொங்கலுக்கு இன்னும் 2 மாதம் இருக்கும் நிலையில் இதுவரை 5 படங்கள் பொங்கலைக் குறிவைத்து களத்தில் இறங்கி இருக்கின்றன. இன்னும் எத்தனை படங்கள் வெளியாகப் போகின்றன என்பது தெரியவில்லை, எனினும் போட்டி கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.English summary
Miruthan, Idhu Namma Aalu, Thaarai Thappttai, Kathakali and Oru Naal Koothu These Movies to Hit Screens for Pongal(2016) Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil