twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா விதிமுறை.. விட்டு விளாசிய டாம் குரூஸ்.. கோபத்தில் வெளியேறிய படக்குழுவினர்!

    By
    |

    லண்டன்: கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களை டாம் க்ரூஸ் கடுமையாக விளாசியதை அடுத்து படக்குழுவை சேர்ந்த 5 பேர் வெளியேறி விட்டனர்.

    டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்.

    'அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்..? பிரபல நடிகை ஆவேசம்.. நடிகர் மீது வழக்குத் தொடர முடிவு 'அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்..? பிரபல நடிகை ஆவேசம்.. நடிகர் மீது வழக்குத் தொடர முடிவு

    அதிரடி ஆக்‌ஷனின் மிரட்டும் டாம் க்ரூஸின் இந்த சீரிஸில் 6 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

    கிறிஸ்டோபர் மேக்குயரீ

    கிறிஸ்டோபர் மேக்குயரீ

    2018 ஆம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட் படம், உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனால் அதை இயக்கிய கிறிஸ்டோபர் மேக்குயரீ (Christopher McQuarrie) இந்தப் படத்தையும் இயக்குகிறார். டாம் குரூஸ், ஹேலே அட்வெல், விங் ராமெச், சைமன் பெக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    தள்ளி வைப்பு

    தள்ளி வைப்பு

    இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் டாம் குரூஸ், படத்தை தயாரிப்பவர்களில் ஒருவராக இருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் இதன் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    தனி கிராமம்

    தனி கிராமம்

    இதற்கிடையே, தடைப்பட்டிருந்த இதன் ஷூட்டிங், இப்போது லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் நடந்து வருகிறது. அங்கு கொரோனா இல்லாத தனி கிராமத்தை உருவாக்கி, படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இங்கு இடைவெளியைப் பின்பற்றாமல் ஒன்றாகக் கூடிய படக்குழுவினர் சிலரை, டாம் க்ரூஸ் கடுமையாக விளாசினார்.

    துரத்தப்படுவீர்கள்

    துரத்தப்படுவீர்கள்

    அந்த ஆடியோ வெளியே கசிந்தது. அதில், இதுபோன்ற விதிமீறலை இனி, பார்க்கக் கூடாது. விதிமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால் இங்கிருந்து துரத்தப்படுவீர்கள். நமது துறை முடங்கியதால் வேலையிழந்தவர்களிடம் பேசிப்பாருங்கள். வேலையின்றி அவர்களால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாது.

    வெளியேறினர்

    வெளியேறினர்

    சாப்பாடு கிடைக்காது. இந்த நினைப்பில்தான், தினமும் உறங்குகிறேன். இனி கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இதை செய்யவில்லை என்றால் வெளியேற்றப்படுவீர்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். இந்நிலையில், அவர் பேச்சை எதித்து படக்குழுவை சேர்ந்த 5 பேர் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    உயிர் போய்விடும் என தெரிந்தும் ரிஸ்க் எடுத்த ஹீரோ- வீடியோ

    English summary
    As many as five crew members on the sets of Mission: Impossible have reportedly quit following actor Tom Cruise's rant against them for not following Covid-19 protocols.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X