»   »  கமலின் தூங்காவனம் ஹிட்டாக 'அந்த' ராசி கைகொடுக்குமோ?

கமலின் தூங்காவனம் ஹிட்டாக 'அந்த' ராசி கைகொடுக்குமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபநாசத்தை போன்று தூங்காவனமும் ரீமேக் படம் தான். இந்த ரீமேக் ராசி கமலுக்கு மீண்டும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல் ஹாஸன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், மதுஷாலினி உள்ளிட்டோர் நடித்துள்ள தூங்காவனம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் ஹிட்டாவதற்கான காரணங்களை பார்ப்போம்,

நடிகர்கள்

நடிகர்கள்

தூங்காவனத்தில் கமல் ஹாஸன், பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என்று நடிப்பில் அசத்தும் நடிகர்கள் உள்ளனர். டிரெய்லரிலேயே அவர்களின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவின் 50வது படம் இது. அவர் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஹீரோவுடன் மரத்தை சுற்றி பாட்டு பாடுவதுடன் அவர் வேலை முடிந்து விடாது.

ரீமேக்

ரீமேக்

த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படம் ஹிட்டானது. தூங்காவனம் படமும் ரீமேக் தான். ஸ்லீப்லெஸ் நைட்ஸ் என்ற பிரெஞ்சு சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்தின் ரீமேக் தூங்காவனம். ரீமேக் ராசி கமலுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ரான்

ஜிப்ரான்

ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கும். அதுவும் பின்னணி இசை நிச்சயம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. தூங்காவனத்தில் நீயே உனக்கு ராஜா என்ற ஒரேயொரு பாடல் மட்டுமே உள்ளது. அந்த பாடலை பாடியவர் வேறு யாரும் இல்லை கமல் தான்.

கமல்

கமல்

தூங்காவனம் படத்தை உலக நாயகனுக்காகவே பார்க்கலாம். அவர் படத்தில் வித்தியாசமான லுக், பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் கமல் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

English summary
Kamal Haasan starrer Thoongavanam could be a hit for the above five reasons. Movie will hit the screens on Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil