»   »  டோணி படமும், அவரின் 5 ரகசியங்களும்...

டோணி படமும், அவரின் 5 ரகசியங்களும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரை பற்றி ரசிகர்களுக்கு தெரியாத 5 விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.41 கோடி வசூல் செய்தது.

படத்தில் டோணி பற்றி ரசிகர்களுக்கு தெரியாத 5 விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட்

கிரிக்கெட்

இளம்வயதில் டோணிக்கு கால்பந்தாட்டம் தான் பிடிக்கும், கிரிக்கெட் அல்ல. சின்ன பந்தை வைத்து எப்படி விளையாடுவது என டோணி அவரது பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளரிடம் கேட்டுள்ளார். அவர் கோல்கீப்பராக இருந்ததை பார்த்து தான் அவருக்கு பள்ளி கிரிக்கெட் அணியில் இடம் கொடுத்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட்

டோணி என்றாலே அவரது ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலம். அது அவருடைய சொந்த கண்டுபிடிப்பு இல்லை. அவரது நண்பர் சந்தோஷ் தான் அவருக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்துள்ளார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் முன்பே யுவராஜும், டோணியும் நன்கு பழக்கமானவர்கள். இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டிகளில் டோணி அணி யுவராஜ் அணிக்கு எதிராக விளையாடியது.

டோணி

டோணி

தான் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று தெரியாத பெண்களை டோணிக்கு பிடிக்குமாம். சாலை விபத்தில் இறந்த அவரது காதலி பிரியங்கா டோணி யார் என்பது தெரியாமல் தான் அவருடன் பேசியுள்ளார். சாக்ஷியும் டோணியை சந்தித்து பேசியபோது அவர் யார் என்பது தெரியாதாம்.

டிராவிட்

டிராவிட்

ஓடிஐ அணியில் இருந்து சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் நீக்கப்பட டோணி தன் காரணம். 2011ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இளம் வீரர்கள் உள்ள அணியுடன் விளையாடவே டோணி டிராவிட், கங்குலியை அணியை விட்டு நீக்க திட்டம் தீட்டி செயல்படுத்தினாராம்.

English summary
Cool captain Dhoni's biopic has revealed 5 unknown facts about the best wicket keeper.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil