»   »  செக் மோசடி.. விஜயகாந்த் படத் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!

செக் மோசடி.. விஜயகாந்த் படத் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செக் மோசடி வழக்கில் பிரபல தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆபாவாணன்.

5 year imprisonment for producer Abavanan

கறுப்பு ரோஜா படத்துக்குப் பிறகு அவர் புதிய படம் தயாரிக்கவில்லை. கடும் நஷ்டத்தால் மிகவும் சிக்கலுக்குள்ளானார்

1999ல் சென்னை கதீட்ரல் சாலை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் வங்கிச் சலுகையை தவறாகப்பயன்படுத்தி 3.31 கோடி ஏமாற்றியதாக ஆபாவாணன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. வங்கியின் மேலாளர் ராஜகோபால், உதவி மேலாளர் ராமானுஜம் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கில் இவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆபாவாணனுக்கு சிறை தண்டனையோடு 2 கோடியே 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை சிபிஐ நீதிமன்றம்.

மோசடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளருக்கு 15 லட்சம், உதவி மேலாளருக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

English summary
The Chennai CBI court has imposed 5 years jail and Rs 2.40 cr fine to producer Abavanan in cheque bounce case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil