twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு - போர்க்கொடி தூக்கும் நடிகை

    By Vignesh Selvaraj
    |

    கொச்சின் : கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சினிமா நடிகைகள் திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை துவங்கினார்கள்.

    இதன்மூலம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.

    ரம்யா நம்பீசன்

    ரம்யா நம்பீசன்

    இந்த அமைப்பின் புதிய திட்டமாக மலையாள நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிற கோரிக்கையை உயர்த்திப் பிடித்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.

    50% பெண்கள் வேண்டும்

    50% பெண்கள் வேண்டும்

    இதுபற்றி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ரம்யா நம்பீசன். 'ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப்பாதி பெண்கள் இருந்தால் தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.' எனக் கூறியுள்ளார் ரம்யா.

    தனிப்பட்ட முடிவல்ல

    தனிப்பட்ட முடிவல்ல

    திலீப்பின் 'ராம்லீலா' படத்தை தடுக்காதீர்கள் என மஞ்சு வாரியார் சொன்னது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கியது சிலர் சொல்வது போல மம்முட்டி, பிருத்விராஜை சந்தோஷப்படுத்த எடுத்த தனிப்பட்ட முடிவு அல்ல.

    மன்னிப்பு கேட்போம்

    மன்னிப்பு கேட்போம்

    ஒருவேளை திலீப் குற்றமற்றவர் என நிரூபணமானால், அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்' எனக் கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்.

    English summary
    Cinema actresses in Kerala started the WCC, which included women in various organizations of the film industry. Remya Nambeesan, who has been raised the demand for 50% reservation for women in the Association of Malayalam Movie Artists (AMMA).
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X