»   »  இறந்து கிடந்த நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் 50 பவுன் நகைகள் மாயம்: சகோதரர்

இறந்து கிடந்த நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் 50 பவுன் நகைகள் மாயம்: சகோதரர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மாயமாகியுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ள ஜெயஸ்ரீ(49) சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் பிணமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

50 sovereign jewels missing from actress Jeyasree's house: Brother

அவர் படுக்கையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். தரையில் ஆணுறை கிடந்தது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் ஜெயஸ்ரீ தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சியில் வேலை செய்யும் அவரின் சகோதரர் செல்வராஜ் போலீசாரிடம் கூறியிருப்பதாவது,

ஜெயஸ்ரீயின் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அவர் அணிந்திருந்த கவரிங் நகைகள் அப்படியே உள்ளன என்றார்.

English summary
Actress Jeyasree's brother Selvaraj said that 50 sovereign jewels are missing from her house in Chennai. The actress was found dead at her house on sunday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil