»   »  கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா: பிரபாஸை பார்த்து கேட்ட 6,000 பெண்கள்

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா: பிரபாஸை பார்த்து கேட்ட 6,000 பெண்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி மற்றும் பாகுபலி 2 படப்பிடிப்பு நடந்தபோது சுமார் 6 ஆயிரம் பெண்கள் பிரபாஸிடம் தங்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிக்க வசதியாக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பெட்டி, பெட்டியாய் பணத்துடன் தயாரிப்பாளர்கள் அவரின் வீட்டிற்கு படையெடுத்தும் அவர் மசியவில்லை.

இந்த தகவலை பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பிரபாஸ்

பிரபாஸ்

தெலுங்கு நடிகர் பிரபாஸாக இருந்த அவர் தற்போது உலக அளவில் பெரிய ஹீரோவாக காணப்பட்டுள்ளார். பாகுபலி படம் மூலம் உலக அளவில் பிரபாஸுக்கு ஏராளமான ரசிகைகள் கிடைத்துள்ளனர்.

காதல்

காதல்

பாகுபலி மற்றும் பாகுபலி படங்களில் நடித்தபோது அதாவது கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பெண்கள் பிரபாஸிடம் தங்களை காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். படப்பிடிப்பு தளங்களுக்கு நேரில் வந்து பெண்கள் தங்களின் காதலை தெரிவித்துள்ளனர்.

படம்

படம்

6 ஆயிரம் பெண்கள் பிரபாஸிடம் காதலை தெரிவித்தபோதிலும் அவர் நாசுக்காக அதை ஏற்க மறுத்துள்ளார். நான் பாகுபலி படங்களில் பிசியாக உள்ளேன் காதல், திருமணத்திற்கு நேரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

பிரபாஸுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து வைக்க அவர் வீட்டில் முடிவு செய்துள்ளார்கள். பெண் கூட பார்த்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

English summary
Nearly 6,000 women have proposed to Prabhas in the last five years during which he was shooting for Baahubali and Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil