»   »  பணம் தரியா, லீக் பண்ணவா: பாகுபலி 2 இணை தயாரிப்பாளரை மிரட்டிய 6 பேர் கைது

பணம் தரியா, லீக் பண்ணவா: பாகுபலி 2 இணை தயாரிப்பாளரை மிரட்டிய 6 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளரான கரண் ஜோஹாரை மிரட்டிய வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளர் கரண் ஜோஹாரை 6 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

6 held for threatening Karan Johar

இது குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எங்களிடம் தரமான பிரிண்ட் உள்ள பைரேட்டட் காபி உள்ளது. நாங்கள் கேட்கும் பணம் தராவிட்டால் அதை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று ராகுல் மேத்தா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி பாகுபலி 2 கரண் ஜோஹார் மற்றும் தயாரிப்பாளர்களை மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகாரில் உள்ள தியேட்டர் உரிமையாளர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 11ம் தேதி ஹைதராபாத்தின் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் மேத்தா கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த தகவலின்பேரில் டெல்லியில் வைத்து ஜிதேந்திர மேத்தா, தவ்பிக், முகமது அலி மற்றும் பீகாரில் திவாகர் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Police arrested six men including a theatre owner for threatening Baahubali 2 co-producer Karan Johar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil