»   »  'நீ விருது வாங்கறதை ரசிச்சு பார்க்கப் போறேன்'.. சமுத்திரக்கனியை வாழ்த்திய சசிக்குமார்

'நீ விருது வாங்கறதை ரசிச்சு பார்க்கப் போறேன்'.. சமுத்திரக்கனியை வாழ்த்திய சசிக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றதுக்கு, நடிகர் சசிக்குமார் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

63 வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, நடிகர் சமுத்திரக்கனிக்கு கிடைத்துள்ளது.

63 National Awards: Sasikumar Praised Samuthirakani

மேலும் துணை நடிகர், சிறந்த படம் ,சிறந்த படத்தொகுப்பாளர் உட்பட 3 விருதுகளை விசாரணை படம் வென்றிருக்கிறது.

சிறந்த துணை நடிகர் விருதை வென்ற சமுத்திரக்கனிக்கு திரையுலகில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

'பசங்க', 'தலைமுறைகள்' படங்களுக்காக நான் விருது வாங்கப் போகும்போது நீ உட்கார்ந்து பார்த்து ரசிச்சே. இன்னிக்கு 'விசாரணை'க்காக நீ வாங்கப்போற... நான் உட்கார்ந்து ரசிச்சு பார்க்கப் போறேன். இறைவனுக்கு நன்றி!

Posted by M.Sasikumar on Monday, March 28, 2016

இந்நிலையில் இயக்குநரும்,நடிகருமான சசிக்குமார் தன்னுடைய பாணியில், சமுத்திரக்கனிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் 'பசங்க', 'தலைமுறைகள்' படங்களுக்காக நான் விருது வாங்கப் போகும்போது நீ உட்கார்ந்து பார்த்து ரசிச்சே. இன்னிக்கு 'விசாரணை'க்காக நீ வாங்கப்போற... நான் உட்கார்ந்து ரசிச்சு பார்க்கப் போறேன். இறைவனுக்கு நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சசிக்குமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக, இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

நமது 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது. ராஜா சாரை வணங்குகிறேன். பாலா அண்ணனை வாழ்த்துகிறேன்.

Posted by M.Sasikumar on Sunday, March 27, 2016

இதற்கு "நமது 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது. ராஜா சாரை வணங்குகிறேன். பாலா அண்ணனை வாழ்த்துகிறேன்" என்று பாராட்டியிருக்கிறார்.

57 வது தேசிய விருதுகள் விழாவில் பசங்க 3 தேசிய விருதுகளையும், 61 வது தேசிய விருதுகள் விழாவில் தலைமுறைகள் திரைப்படம் 1 தேசிய விருதையும் வென்றிருந்தது.

இந்த 2 படங்களையும் சசிக்குமார் தயாரித்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
63 National Awards:Samuthirakani won the National Award for Best Supporting Actor now Sasikumar Praised him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil