twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகுமார் - சூர்யா - கார்த்தியின் உதவியால் பலன் பெற்ற 650 மாணவர்கள்!

    By Shankar
    |

    சென்னை: நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா மற்றும கார்த்தியின் உதவியால் 650 மாணவர்கள் உயர்கல்வி பெற்றுள்ளனர். தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை இது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

    நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

    பரிசுகள்...

    பரிசுகள்...

    விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக நடத்தப்படும் தாய் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கினர்.

    650 மாணவர்களுக்கு...

    650 மாணவர்களுக்கு...

    விழாவில் சூர்யா பேசுகையில், "கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளைவிட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு கடைசி வரை நிலைத்திருக்கும். அகரம் பவுண்டேசன் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

    இந்த அமைப்பு சார்பில் 650-க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும்," என்றார்.

    சிவகுமார் தொடங்கி வைத்தது...

    சிவகுமார் தொடங்கி வைத்தது...

    அதிக மதிப்பெண் பெறும் ஏழை ப்ளஸ்டூ மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி என்ற திட்டத்தை தனது 100வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெளியானபோது 1979-ல் தொடங்கினார் சிவகுமார். 30 ஆண்டுகள் தொடர்ந்து அந்த பணியைச் செய்து வந்தார் சிவகுமார்.

    சூர்யா - கார்த்தி

    சூர்யா - கார்த்தி

    சூர்யாவும், கார்த்தியும் நடிகர்களாக கோலோச்ச ஆரம்பித்ததும் அந்தப் பொறுப்பை சூர்யா ஆரம்பித்த அகரம் பவுண்டேஷன் கையிலெடுத்துக் கொண்டது. சிறிய அளவிலிருந்த இந்த கல்வி உதவியை பெரிய அளவுக்குக் கொண்டு சென்றவர்கள் சூர்யாவும் கார்த்தியும்தான்.

    ஏழை மாணவர்கள்...

    ஏழை மாணவர்கள்...

    "என்னைப் போல ஏழ்மை நிலையிலிருந்து கல்வியைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களை ஊக்கப்படுத்த நான் சிறிய அளவில் உதவிகளைச் செய்தேன். என் பிள்ளைகள் சூர்யாவும் கார்த்தியும் அதை பெரிய அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்," என்றார்.

    English summary
    Actors Sivakumar, Surya and Karthi have helped more than 650 poor students to get good education for years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X