twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தந்தை சிவகுமாருக்கு மறுக்கப்பட்ட தேசிய விருது.. தட்டி தூக்கிய சூர்யா..தரமான சம்பவம்

    |

    சென்னை: தந்தை மிகச்சிறந்த நடிகராக அறியப்பட்டாலும் தந்தையை மிஞ்சிய தனயனாக தந்தையால் பெற முடியாத தேசிய விருதை பெற்றுள்ளார் சூர்யா

    இவரெல்லாம் எதற்கு நடிக்க வந்து உயிர வாங்கிகிட்டு என திட்டு வாங்கிய நடிகர் சூர்யா இன்று நடிப்புக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

    சூரரைப்போற்று படம் தமிழ் படங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 5 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.

    3 படங்கள் 10 அவார்டுகளை அள்ளிய தமிழ் படங்கள்3 படங்கள் 10 அவார்டுகளை அள்ளிய தமிழ் படங்கள்

    80 களின் முன்னணி நடிகர் சிவகுமார்

    80 களின் முன்னணி நடிகர் சிவகுமார்

    தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். ஓவியரான சிவகுமார், அழகான தோற்றம் கொண்டவர். ஆனால் அரும்பு மீசை பருவத்திலேயே நடிக்க வந்துவிட்டார். அவருக்கு முருககடவுள் ரோல் பொறுத்தமாக இருக்கும் என அதை கொடுத்து வந்தனர். காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகுமார். அவர் ஏற்காத ரோல் இல்லை எனலாம். வசன உச்சரிப்பு, உடல் மொழி, நடிப்பு அனைத்திலும் கரைகண்டவர்.

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி கைகொடுக்கவில்லை

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி கைகொடுக்கவில்லை

    அவர் 70 கள் தொடங்கி 80 கள், 90 கள் வரை முன்னணி நடிகராக இருந்தவர் சிவகுமார். மேடைப் பேச்சில் வல்லவர். அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் தமிழக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. பல படங்கள் அவருக்கு மாநில விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. சிவகுமார் நடித்த படங்கள் தேசிய விருதைப்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை. ரோசாப்பு ரவிக்கைக்காரி படத்துக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.

    அகரம் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு உதவி

    அகரம் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு உதவி

    சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே திரைத்துறையில் உள்ளனர். மருமகள் ஜோதிகாவும் திரைத்துறையில் இருக்கிறார். இருவரும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல அற்புதமான சமூக அக்கறையுள்ள படங்களை கொடுத்து வருகின்றனர். சமூக சேவையிலும் சூர்யா மிகுந்த அக்கறை காட்டுகிறார். சூர்யாவின் அகரம் அறக்கட்டளையே அதற்கு சாட்சி. அதன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி கிடைக்கிறது.

    ஓடிடியில் துணிந்து வெளியிட்ட சூரரைப்போற்று

    ஓடிடியில் துணிந்து வெளியிட்ட சூரரைப்போற்று

    சூர்யா தயாரித்த சூரரைப்போற்று படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என 5 விருதுகளை அள்ளியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் துணிந்து ஓடிடியில் படத்தை வெளியிட்டார் சூர்யா. இதனால் பலரது பகையை சந்தித்தார், ஆனாலும் அவர் பயப்படவில்லை. அவர் வெளியிட்டதை தொடர்ந்து பல படங்கள் பின்னர் வெளிவந்தது.

    சிறந்த நடிகரான தந்தை

    சிறந்த நடிகரான தந்தை

    சூர்யாவின் தந்தை சிவகுமார் சிறந்த நடிகர், அவரது தம்பி கார்த்தியும் நடிப்பில் பின்னுபவர். சூர்யாவை அறிமுகபடுத்தியபோது அவர் இயக்குநரிடம் திட்டு வாங்கி நடித்தும் படத்தில் சோபிக்கவில்லை. சாக்லேட் பாயாக பல ஆண்டுகள் வலம் வந்தாலும் அவர் ஒரு சிறந்த நடிகராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சிவகுமாரின் மகனா இப்படி என பேசி வந்தனர்.

    தந்தையை மிஞ்சிய தனயன்

    தந்தையை மிஞ்சிய தனயன்

    இந்த நேரத்தில் சவால் விடும் வகையில் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்தார். தொடர்ந்து பிதாமகன், காக்க காக்க, சிங்கம் என அவரது வளர்ச்சி ஜெய்பீமில் வந்து நின்றுள்ளது. சிவகுமார் பெற முடியாத தேசிய விருதையும் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் சொந்த தயாரிப்பு என சூரரைப்போற்று படத்துக்கான சிறந்த பட விருதையும் வாங்க உள்ளார். தந்தையை மிஞ்சிய தனயனாக அடுத்த ஆண்டும் ஜெய்பீம் படத்திற்காக விருதை வெல்வார் என எதிர்ப்பார்ப்போமாக.

    தந்தைக்கு மறுக்கப்பட்டது தனயன் தட்டி தூக்கினார்

    தந்தைக்கு மறுக்கப்பட்டது தனயன் தட்டி தூக்கினார்

    1991ம் வருடம். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய 'மறுபக்கம்' என்ற படத்தில் நடித்த நடிகர் சிவகுமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது மத்திய அரசால் மாலை ஏழு மணிக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவோ, பகிர்ந்து கொள்ளவோ சிவகுமாருக்கு அடுத்த அதிர்ச்சியாக அடுத்த 15 நிமிடத்தில்
    சிறந்த நடிகருக்கான விருது, 'அக்னிபாத்' படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு என்று மறு அறிவிப்பு வந்தது. அது, அந்த நேர அரசியல் விளையாட்டு. இன்று அதே சிறந்த நடிகருக்கான விருது, அதே சிவகுமார் இல்லம் தேடி வந்திருக்கிறது, சிவகுமாரின் வாரிசு சூர்யா தட்டி தூக்கியுள்ளார். காலம் தான் எவ்வளவு வினோதமானது.

    English summary
    68th National Film Awards (தேசிய திரைப்பட விருதுகள் 2022): தந்தை மிகச்சிறந்த நடிகராக அறியப்பட்டாலும் தந்தையை மிஞ்சிய தனயனாக தந்தையால் பெற முடியாத தேசிய விருதை பெற்றுள்ளார் சூர்யா.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X