Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
68வது தேசிய திரைப்பட விருதுகள்: ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்ட விருதுகளின் பட்டியல் இதோ…
டெல்லி: 68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழில் சூரரைப் போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்றுள்ளன.
தமிழ் உட்பட மற்ற மொழிகளில் தேசிய விருது வென்ற திரைப்படங்கள் கலைஞர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி, அதிலிருந்து சிறந்த படங்களுக்கும், அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய விருது 'நாயகன்' சூர்யா..மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு..குவியும் வாழ்த்து!

தமிழில் மொத்தம் 10
தமிழ்ப் படங்களில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் மொத்தம் 5 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசை ஜி.வி. பிரகாஷ், சிறந்த திரைக்கதை, சிறந்த படம் ஆகிய 5 மிக முக்கியமான விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் வசந்த் இயக்கிய 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சிறந்த தமிழ் மொழிப் படமாக தேர்வாகியுள்ளது. மேலும், சிறந்த துணை நடிகைக்காக லக்ஷ்மியும், சிறந்த எடிட்டிங்கிற்காக ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருதுகளை பெறுகின்றனர். அதேபோல், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தா என இரண்டு விருதுகளை பெறுகிறார் 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோனி அஸ்வின்.

மலையாளத் திரைப்படங்களின் பட்டியல்
ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம் 4 பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ளது. இப்படத்தை இயக்கிய சச்சிதானந்தன் சிறந்த இயக்குநராக தேர்வாகியுள்ளார். சச்சிதானந்தன் மறைந்துவிட்ட நிலையில், அவருக்கு தேசிய விருது வழங்கப்படுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடித்த பிஜு மேனன் சிறந்த துணை நடிகராக தேர்வாகியுள்ளார். அதேபோல், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டருக்கான விருதை இப்படத்தில் பணியாற்றிய ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகியோர் பெறுகின்றனர். மேலும் சிறந்த பெண் பாடகிக்கான விருது 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் 'களக்காத்த சந்தனமேரம்' பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவிற்கு வழங்கப்படுகிறது. இதுதவிர சிறந்த மலையாள மொழித் திரைப்படம் விருது சென்னா ஹெக்டே இயக்கிய 'திங்களச்ச நிச்சயம்' படத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், 'மாலிக்' திரைப்படம் சிறந்த சவுண்ட் டிராக்கிற்காக தேர்வாகியுள்ளது.

தெலுங்குத் திரைப்படங்களின் பட்டியல்
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஆலா வைகுண்டபுரமுளு' படத்தின் பாடல்களுக்காக தமன் சிறந்த இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார். 'நாட்டியம்' படத்தின் டான்ஸ் கோரியோகிராபர் சந்த்யா ராஜூ, சிறந்த நடன இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அதே படத்தில் மேக்அப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றிய ராம்பாபுவுக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த தெலுங்கு மொழி படமாக 'கலர் போட்டோ' என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இந்தி திரைப்படங்களின் பட்டியல்
சிறந்த பாடலாசிரியருக்கான விருது 'சாய்னா' படத்தின் பாடல்களுக்காக மனோஜ் முண்டாசிர் என்பவருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது 'தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்' படத்தில் பணியாற்றிய மகேஷ் ஷெர்லா, நாச்சிகேட் பர்யே ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடித்த அஜய் தேவ்கன் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார். தமிழில் இருந்து சூர்யா, இந்தியில் அஜய் தேவ்கன் இருவரும் சிறந்த நடிகர்களாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியில் சிறந்த படமாக 'டூல்சிதாஸ் ஜூனியர்' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தமிழ் படங்கள் தான் டாப்
68வது தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்று முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மலையாளம், மராத்தி ஆகிய மொழி திரைப்படங்கள் தலா 6 விருதுகளை வென்று பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்த தேசிய விருதுகள் அறிவிப்பு தமிழ்த் திரையுலகினருக்கு மகிழ்ச்சியையும், புது நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாக, சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.