Just In
- 5 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 6 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 9 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 10 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் நாமினேஷனில் நடந்த அதிரடி திருப்பம்.. அனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.. சிக்கிய டம்மி மம்மி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் மொத்தம் 7 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
ரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா!

7 பேர் லிஸ்ட்டில்
இதில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய 7 பேர் இடம் பிடித்தனர். அவர்களில் பாலாஜி ரூல்ஸை பிரேக் பண்ணுவதாகவும், ரமேஷ் சேஃப் கேம் விளையாடுவதாகவும், சனம் சீன் கிரியேட் பண்ணுவதாகவும் சக ஹவுஸ்மெட்ஸ் காரணங்களை கூறினர்.

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி
இதேபோல் அனிதா எந்த விஷயம் என்றாலும் குறைக் கண்டுபிடிப்பதாகவும், நிஷா மற்றும் சோம் சிலரின் ஷேடோவாக இருப்பதாகவும் சோம், ராஜா வீட்டு கன்னுக்குட்டியாய் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாகவும் கூறியும் நாமினேட் செய்தனர்.

டாப்புள் பாஸ்
நாமினேட் ஆனவர்களை காரணத்துடன் அறிவித்தார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து எவிக்ஷன் ஃபிரி பாஸை போன்று பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷன் டாப்புள் பாஸை அறிவித்தார் பிக்பாஸ்.

தப்பிக்கலாம்
இந்த டாஸ்க்கில் நாமினேட் ஆன 7 பேர் பங்கேற்றனர். அவர்களில் இறுதி வரை நிற்கும் போட்டியாளர் நாமினேஷன் டாப்புள் கார்டை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம்.

விலகிய போட்டியாளர்கள்
மேலும் அந்த நபர் தனக்கு பதிலாய் நாமினேஷனில் இல்லாத ஒருவரை நாமினேட் பண்ணலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து பாலா, ஆரி, ரமேஷ், சோம் ஆகியோர் விலக, நிஷா, அனிதா, சனம் ஆகியோர் விடாப்பிடியாக இருந்தனர்.

லிஸ்ட்டில் சம்யுக்தா
ஒருக்கட்டத்தில் நிஷாவும் சனமும் விட்டுக்கொடுக்க இதில் அனிதா வெற்றி பெற்றார். இதனால் நாமினேஷனில் இருந்து தப்பித்தார் அனிதா. மேலும் டாப்புள் பாஸுடன் வீட்டுக்குள் சென்ற அனிதா சம்யுக்தாவை நாமினேட் செய்தார். இதன் மூலம் இந்த வாரம் முதலில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெறாத சம்யுக்தா அனிதா மூலம் நாமினேஷனில் சிக்கினார்.