»   »  ரஜினியின் புதுப் படம்... இந்த 7 பேரில் ரேஸில் முந்தப் போகும் இயக்குநர் யாரோ!

ரஜினியின் புதுப் படம்... இந்த 7 பேரில் ரேஸில் முந்தப் போகும் இயக்குநர் யாரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிப்பது யார்... இயக்குநர் யார்... இவைதான் இன்று கோடம்பாக்கத்தைச் சுற்றிச் சுற்றி வரும் கேள்விகள். மீடியாவும் இதைத்தான் பிரதானமாக எழுதி வருகின்றன.

ரஜினி படத்தின் தயாரிப்பாளர் என்று மூன்று நிறுவனங்களின் பெயர்களை சீட்டுக் குலுக்கிப் போடாத குறையாக எழுதி வருகின்றனர்.

இந்த மூவரில் ஆஸ்கார் ரவிச்சந்திரன், தான் தயாரிக்கவில்லை என்று அறிவித்துவிட்டார். ஆனால் ரஜினியைச் சந்தித்து பல விஷயங்கள் பேசியிருக்கிறார். அடுத்து ஏஜிஎஸ் மற்றும் ஈராஸ்தான் லிஸ்டில் உள்ளன.

ஏழு இயக்குநர்கள்

ஏழு இயக்குநர்கள்

ரஜினியை இயக்கப் போகிறவர்கள் என்று ஏழு இயக்குநர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தப் பட்டியலில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், ராஜமவுலி ஆகிய 7 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் ஏற்கனவே ரஜினியை வைத்து எந்திரன், சிவாஜி படங்களை இயக்கியுள்ளார். அவை வெற்றி பெற்றுள்ளன. எந்திரன் 2 படத்தின் கதை தயாராக உள்ளது. ரஜினி சம்மதத்துக்காக அவர் காத்திருக்கிறார்.

வாசு

வாசு

பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி படங்களை இயக்கிய வாசுவும் ரஜினியை இயக்க தயாராக உள்ளார். கதை கூட தயாராக உள்ளதாம்.

ஹரி

ஹரி

இயக்குநர் ஹரி ‘சிங்கம், சாமி, அய்யா உள்ளிட்ட ஹிட் படங்கள் எடுத்துள்ளார். அய்யா கதை ரஜினிக்காக அவர் உருவாக்கியதுதான். இப்போதும் ரஜினிக்கான கதையொன்று தன்னிடம் இருப்பதாக கூறி வருகிறார்.

முருகதாஸ்

முருகதாஸ்

அடுத்து ஏ.ஆர்.முருகதாசும் ரஜினிக்காக கதை செய்து வைத்து காத்திருக்கிறார். ஏற்கெனவே இவர் ரஜினியைச் சந்தித்து கதையும் சொல்லியிருக்கிறார்.

ராஜமவுலி

ராஜமவுலி

உங்கள் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ராஜமவுலியிடமே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் ரஜினி. பாகுபலி முடிந்த பிறகு அதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா படம் மூலம் பிரபலமானார். இந்த படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து போய் கார்த்திக் சுப்பராஜை நேரில் அழைத்து பாராட்டினார். பாபி சிம்ஹா பாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாகக் கூறியது நினைவிருக்கலாம்.

ரஜினியைப் பொருத்தவரை இயக்குநர் யாராக இருந்தாலும், அருமையான ஸ்க்ரிப்ட் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

English summary
There are seven leading directors in the race to direct Superstar Rajinikanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil