அஜித் காலண்டர்
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அஜித் புகைப்படத்தோடு 5 அடி உயரமுள்ள காலண்டரை உருவாக்கி இருந்தார்கள். இந்த காலண்டரை சென்னையை சேர்ந்த சரித்திர நாயகன் தல அஜித் குழுவினர் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 அடியில் காலண்டர்
மயிலாடுதுறை அஜித் ரசிகர்கள் 7 அடி உயரத்தில் பிரமாண்டமாக அஜித் காலண்டரை உருவாக்கியுள்ளனர். மயிலாடுதுறையில் உள்ள நடிகர் அஜீத் ரசிகர்கள் வருடா வருடம் புதுவருடத்தை வித்தியாசமான முறையில் வரவேற்று வருகின்றனர்.
மரத்தால் உருவாக்கப்பட்ட காலண்டர்
இந்தாண்டு 7 அடி உயரத்தில் அஜித் உருவத்துடன் கூடிய காலண்டரை வடிவமைத்து அசத்தியுள்ளனர். மரத்தால் காலண்டரை உருவாக்கி அதில் அஜீத் உருவத்தை பொருத்தியுள்ளனர். இதே போல அண்மையில் அஜீத்தின் 25 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து ரசிகர்கள் கொண்டாடினர்.
அஜித் மகள் அனோஷ்கா
சமீபத்தில், அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளுக்காக அவரை ஜெயலலிதா போல சித்தரித்து பேனர் வைத்தனர். அஜித்தின் மகன் ஆத்விக் படத்தையும் அஜித் படத்தோடு பொருத்தி பேனர் வைத்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் காலண்டரில் தன்னம்பிக்கை தல குரூப்ஸ், திருச்சி என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும், "எண்ணம் போல் வாழ்க்கை" "வாழு, வாழவிடு" போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தக் காலண்டரை தூக்கியபடி சென்று அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.