»   »  பட்டயக் கிளப்பும் ஏழு பாடல்கள்... அட்டகாசமாகத் தயாராகும் விவேகம் ஆல்பம்!

பட்டயக் கிளப்பும் ஏழு பாடல்கள்... அட்டகாசமாகத் தயாராகும் விவேகம் ஆல்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் பாடல்கள் குறித்துதான் இப்போது பரபரப்பாக பேசுகிறார்கள்.

காரணம் படங்களில் பாடல்களை முடிந்த வரை இல்லாமல் பார்த்துக் கொள்ளும் இந்த நேரத்தில், விவேகம் படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெறவிருக்கிறதாம்.


முதல் பாடலான சர்வைவா டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.


இன்று மாலை...

இன்று மாலை...

இந்த சர்வைவா பாடலின் முழு வடிவமும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல்தான் படத்தின் தீம் பாடலாக இருக்கும் என்கிறார்கள்.


சாவன் தளத்தில்...

சாவன் தளத்தில்...

இந்தப் பாடல் சாவன் (Saavn) என்ற இணைய இசை செயலியில் வெளியாகிறது. அஜித் போன்ற ஒரு பிரபல நடிகரின் படப் பாடல் ஒன்று இந்த தளத்தில் வெளியிடப்படுவது இதுதான் முதல் முறை.
ஏழு பாடல்கள்

ஏழு பாடல்கள்

விவேகம் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ஏழு பாடல்களுமே இந்த ஆண்டில் கலக்கல் பாடல்களாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஜூலை 27

ஜூலை 27

அஜித் படங்களைப் பொறுத்தவரை பாடல் வெளியீட்டு விழா நடத்தப்படுவதில்லை. நேரடியாக கடைகளில் சிடியாகத் தருவதுதான் வழக்கம். விவேகம் பாடல்களும் இதே முறையில்தான் வெளியாகவிருக்கின்றன. ஜூலை 27-ம் தேதி பாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.


ரிலீஸ்

ரிலீஸ்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள விவேகம் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாகிறது.


English summary
Vivegam music director Anirudh Ravichander has revealed on Twitter that the album will have seven songs and the first song will release today evening in Savnn app.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil