Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தேமுதிக தனித்துப் போட்டி.. வேட்பாளரை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்!
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
73வது குடியரசு தினம்.. அமிதாப் பச்சன் முதல் கமல்ஹாசன் வரை.. நாட்டு மக்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மகேஷ் பாபு, பகத் ஃபாசில் என பல திரை நட்சத்திரங்கள் குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளதை இங்கே காண்போம்.
அமேசான்,
நெட்ஃபிளிக்ஸ்
உடன்
செம
டீல்
பேசிய
அனுஷ்கா
சர்மா...
எவ்வளவு
தெரியுமா
?

அமிதாப் பச்சன்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். தேசியக் கொடியுடன் மக்கள் வெள்ளம் தன்னை காண தனது வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அமிதாப் பச்சன் ஷேர் செய்துள்ளார்.

தாடியில் தேசியக் கொடி
மேலும், தனது தாடியையே தேசியக் கொடி போல மூன்று வர்ணங்களில் மாற்றிய த்ரோபேக் புகைப்படத்தையும் நடிகர் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து குடியரசு தினத்தை ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார். செம க்யூட்டாக இருக்கீங்க அமிதாப் என பல பிரபலங்களும் ஸ்மைலிகளை போட்டு வருகின்றனர்.

கமல் வாழ்த்து
"இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்." என உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பா. ரஞ்சித் ட்வீட்
இந்திய குடியரசின் தந்தை அம்பேத்கரை இந்த தேசமே இன்றைய நாளில் சல்யூட் செய்கிறது என அம்பேத்கரின் புகைப்படத்தை ஷேர் செய்து குடியரசு தின வாழ்த்துக்களை ஜெய்பீம் முழக்கத்துடன் கூறியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு அம்பேத்கருக்கு உள்ள நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் அம்பேத்கரை மையப்படுத்தி ட்வீட் போட்டுள்ளார்.

மகேஷ் பாபு
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் குடியரசு தின விழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வீரத்துடன் இன்னுயிரை தந்து சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை இந்நாளில் நினைவு கூர்வோம் அமைதியையும் அன்பையும் எப்போதும் பேணுவோம் என நடிகர் மகேஷ் பாபு குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

பகத் ஃபாசில் வாழ்த்து
இந்திய தேசியக் கொடி பேக்ரவுண்டில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் குடியரசு தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.