Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 29 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்...
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
78 வயசுல பெருசு செய்த வேலை..பாலியல் குற்றத்தில் சிக்கிய ஸ்க்விட் கேம் நடிகர்..இந்த வயசுல இது தேவையா?
சியோல்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ்.
இந்த வெப் சீரிஸில் நடித்த 78 வயதான ஓ யோங்-சு கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்க்விட் கேம் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், ஓ யோங்-சு மீதான குற்றச்சாட்டு தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நெட்ஃபிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மிரள வைத்த ஸ்க்விட் கேம்
கடந்தாண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ், உலகளவில் பல மில்லியன் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்தத் தொடர், குழந்தைகளின் விளையாட்டை பின்னணியாக வைத்து வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருந்தது. வெளியான நான்கே வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் இந்தத் தொடர் கண்டுகளிக்கப்பட்டு சாதனை படைத்தது. அதேபோல், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்க்விட் கேம்' வெப்சீரிஸ்க்கு கிடைத்தது.

பாலியல் குற்றச்சாட்டு
ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ்ஸின் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக இந்த வெப் சீரிஸில் நடித்திருந்த ஓ யோங்-சு சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார். 50 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வரும் ஓ யோங்-சு, கோல்டன் குளோப் விருது வென்ற முதல் தென்கொரிய நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 78 வயதான ஸ்க்விட் கேம் நட்சத்திரமான ஓ யோங்-சு கொரியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ யோங்-சு மீது அதிரடி நடவடிக்கை
2017ம் ஆண்டு ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த பெண், 2021 டிசம்பரில் ஓ யோங்-சுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். ஆனால் ஓ யோங்-சு மீதான குற்றச்சாட்டில் சரியான விசாரணை இல்லாமல் 2022ல் இந்த வழக்கு முடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளை ஏற்று பிபிசி ஊடகம் இந்த விவகாரத்தை கையில் எடுக்க, தென்கொரிய நீதித்துறை அதிகாரிகள் மீண்டும் ஓ யோங்-சு மீதான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மன்னிப்பு கேட்ட ஓ யோங்-சு
இதனால் மீண்டும் ஓ யோங்-சுவிடம் விசாரணை நடைபெற்ற போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், "ஏரியைச் சுற்றி வழி காட்டுவதற்காக நான் அந்த பெண்ணின் கையை தான் பிடித்தேன். மேலும், அவர் அதை விரும்பாததால் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிட்டேன். அதேநேரம் நான் மன்னிப்புக் கேட்டதால் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக அர்த்தம் கிடையாது" என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஓ யோங்-சு. இந்நிலையில், ஓ யோங்-சு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால், அவர் நடித்துள்ள அரசு விளம்பரத்தை சியோல் கலாச்சார அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வயதில் இது தேவையா?
ஸ்க்விட் கேம் வெப் சீரிஸில் ஓ யோங்-சுவின் நடிப்பும் அவரது கேரக்டரும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், க்ளைமேக்ஸ் காட்சியில் அவர் யார் என்ற உண்மை தெரியவரும் இடத்தில் ரசிகர்களே ஒரு நிமிடம் உறைந்துவிட்டனர். இந்நிலையில், தற்போது பாலியல் குற்றச்சாட்டில் ஓ யோங்-சு சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 78 வயதில் இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.