»   »  'சப்பை' ரவிகிருஷ்ணாவின் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்... உண்மை என்ன?

'சப்பை' ரவிகிருஷ்ணாவின் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்... உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனும் இயக்குநரும் நடிகருமான ஜோதிகிருஷ்ணாவின் தம்பியுமான ரவிகிருஷ்ணா '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் 'ஆரண்யகாண்டம்' படத்தில் 'சப்பை' என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது ரவிகிருஷ்ணாவின் தோற்றம் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

7ஜி ரெயின்போ காலனி

7ஜி ரெயின்போ காலனி

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ரவிகிருஷ்ணா, செல்வராகவன் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கிலும் '7ஜி பிருந்தாவன் காலனி' என்கிற பெயரில் ரீமேக் ஆனது.

ரவிகிருஷ்ணா

ரவிகிருஷ்ணா

அதன் பிறகு, 'சுக்ரன்', 'கேடி' ஆகிய படங்களிலும் நடித்தார் ரவிகிருஷ்ணா. பிறகு, தியாகராஜன் குமாரராஜா இயக்கிய கல்ட் கிளாசிக் படமான 'ஆரண்ய காண்டம்' படத்தில் 'சப்பை' எனும் கேரக்டரில் நடித்தார். அந்தப் படத்திற்காக தன் உடல் எடையை பாதியாக குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் ரவிகிருஷ்ணாவின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. உடல் எடை அதிகரித்த தோற்றத்துடன் ரவிகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் படம் என இந்தப் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

ஆனால், இந்தப் புகைப்படம் லேட்டஸ்ட் புகைப்படம் அல்ல. ரவிகிருஷ்ணாவின் அண்ணனும் இயக்குநரும், நடிகருமான ஜோதிகிருஷ்ணாவின் திருமண வரவேற்பில் 2012-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்திருக்கிறது.

English summary
Ravikrishna is the son of famous producer AM Ratnam. He stepped into Tamil cinema with '7G Rainbow Colony'. In this scenario, A photo of present Ravikrishna is spreading on social networks and shocked all fans. But this photo is taken at reception of Jyothirishna's wedding on 2012.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil