»   »  இந்த ஆண்டின் கடைசி வெள்ளி... துருவங்கள் பதினாறு உள்பட 8 படங்கள் ரிலீஸ்!

இந்த ஆண்டின் கடைசி வெள்ளி... துருவங்கள் பதினாறு உள்பட 8 படங்கள் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2016-ம் ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமையான இன்று மட்டும் மொத்தம் 8 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்துமஸுக்குப் பிந்தைய இந்த வாரம் மற்றும் பொங்கலுக்கு முந்தைய இரு வாரங்களில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது. இந்த இடை வெளியைப் பயன்படுத்தி சிறு படங்களை வெளியிட முனைப்புக் காட்டுவது தயாரிப்பாளர்கள் வழக்கம். கிடைக்கிற கேப்பில் கணிசமாகவே வசூல் ஈட்ட முடியும், படங்களில் ஸ்டஃப் இருந்தால்.

8 new releases in the last Friday of 2016

பொங்கலுக்கு விஜய்யின் பைரவாவும், இரு வாரங்கள் கழித்து சூர்யாவின் எஸ் 3-யும் வெளியாகவுள்ளன. இந்நிலையில், அந்தப் படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க இன்று ஒரே நாளில் 8 தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.

துருவங்கள் 16, அச்சமின்றி, அதிரன், ஏகனாபுரம், கண்டதை சொல்கிறேன், மியாவ், மோ, தலையாட்டி பொம்மை ஆகியவை இன்று வெளியாகும் தமிழ்ப் படங்கள்.

இவற்றில் துருவங்கள் பதினாறு நல்ல விமரிசனங்களைப் பெற்றுள்ளது. ரசிகர்களுக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதில் ஆவல் எழுந்துள்ளது.

அதேபோல அச்சமின்றி, மோ போன்ற படங்களும் கவனம் பெற்றுள்ளன.

English summary
There are 8 direct Tamil movies including Dhuruvangal Pathinaaru are releasing the last Friday of the year 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil