»   »  8 தோட்டாக்கள்.... மிஷ்கின் உதவியாளரின் க்ரைம் த்ரில்லர்!

8 தோட்டாக்கள்.... மிஷ்கின் உதவியாளரின் க்ரைம் த்ரில்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிஷ்கினின் உதவி இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் 8 தோட்டாக்கள் வரும் 7-ம் தேதி வெளியாகிறது.

வெற்றிவேல் சரவணா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தில், புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகி அபர்ணா பாலமுரளி. கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி, அம்மா கிரியே‌ஷன் சிவா, சார்லஸ் விநோத், ஆர்.எஸ். சிவாஜி, தேனிமுருகன், மணிகண்டன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.


8 Thottakkal, a crime thriller from debutant

ஒளிப்பதிவு-தினேஷ்கே.பாபு, இசை-கே.எஸ்.சுந்தர மூர்த்தி, எடிட்டிங்-நாகூரான், ஸ்டண்ட்-திலீப்சுப்புராயன், நடனம்-தினேஷ்,நந்தா, தயாரிப்பு- வெள்ளைப் பாண்டியன், இயக்கம்- ஸ்ரீகணேஷ்.


படம் பற்றி இயக்குநர் கூறுகையில், "இது கிரைம் திரில்லர் கதை. போலீஸ் நிலையத்தில் இருந்த ஒரு துப்பாக்கி மாயமாகிறது. அதில் உள்ள 8 தோட்டாக்கள் வெவ்வேறு இடங்களில் வெடிக்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு காரணம் யார்? என்பது கதை. இதில் நாயகன் வெற்றி, சப்-இன்ஸ் பெக்டராக நடித்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர் மகன்தான். ஆனாலும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.


நாயகி அபர்ணா பத்திரிகை நிருபராக வருகிறார். எம்.எஸ்.பாஸ்கருக்கு இதில் அற்புதமான கதாபாத்திரம்," என்றார்.

English summary
8 Thottakkal is a crime thriller movie directed by Mysskin's assistant Sri Ganesh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil